பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இறுதி பட்டியல் !

பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3-ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் குறித்த பல்வேறு பட்டியல்கள் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது.

அதிலும் இப்போது, பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் இறுதி பட்டியல் இதுதான் என ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பிக்பாஸ் சிசன் 5 போட்டியாளர்கள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.

சிங்கர் சின்னப் பொண்ணு நாட்டுப்புறப் பாடல் மற்றும் சில திரைப்படப் பாடல்கள் மூலம் பிரபலமானவர் சின்னப் பொண்ணு.

இசை வாணி சர்பட்டா பரம்பரை பாடத்தில் இடம்பெற்றுள்ள வம்புள தும்பள பாடலின் பெண் வரிகளைப் பாடியவர்.

விஜே அபிஷேக் சமூக வலைத்தளங்களில் திரைப்படங்களில் விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர். சில படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இமான் அண்ணாச்சி கலக்க போவது யார் நிகழ்ச்சி மூலம் பிரபலமாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவர்.

மில்லா நடிகை ஷகிலாவின் மகள் மில்லா.

பவானி ரெட்டி ரெட்டை வால் குருவி, சின்னத் தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர்.

சந்தோஷ் பிரதாப் கதை திரைக்கதை வசனம் இயக்கம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

கோபிநாத் ரவி 2021-ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர்.

ஜிபி முத்து சமுக வலைத்தளங்களில் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்.

கனி திரு குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

பிரியா ராமன் செம்பருத்தி சீரியல் மற்றும் சூரிய வம்சம் படம் மூலம் பிரபலமானவர்.

அக்‌ஷரா ரெட்டி வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.