சின்னத்திரை பிரபல நடிகை பாவ்னி ரெட்டி கணவர் அமீருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் தான் தற்போதைய சமூக வலைத்தள வைரல்!

சன், விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலில் நடித்த பாவ்னி ரெட்டி முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் நடிப்பில் பிரேக் எடுத்தவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் கம்பேக் கொடுத்தார். அதில் போட்டியாளர் அமீருக்கு பாவ்னி மீது காதல் வந்தது.

அதை தொடர்ந்து விஜய் ஜோடி நிகழ்ச்சியில் பாவ்னியும் காதலை ஒப்புக்கொள்ள கடந்தாண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அடிக்கடி பாவ்னிக்கு காதல் கணவருடன் ரொமான்ஸ் போட்டோஷூட் செய்து வெளியிடுவது வழக்கமாகி இருக்கிறது.