பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஜெனிஃபர் வெளியேற என்ன காரணம்?

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர்.

சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து திடீரென இவர் வெளியேறினார்.

தொடர்ந்து ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிக்க வந்தார்.

ஆனாலும் ஜெனிஃபருக்கு பிறகு ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா இன்னும் சரியாகப் பொருந்தவில்லை.

அது ஒரு பக்கம் இருந்தாலும் ஜெனிஃபர் இப்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

ராதிகா கதாபாத்திரம் இப்போது கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டர் போல இருப்பதால், தனது கர்ப்ப காலத்தில் அதைப் பாதிக்கும்.

எனவே தான் சீரியலில் இருந்து வெளியேறியதாக ஜெனிஃபர் தெரிவித்துள்ளார்.

இப்போது இவரது கர்ப்ப கால போட்டு ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இவரை போன்றே பாரதி கண்ணமா சீரியலில் வென்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஃபரினாவும் கர்ப்பமாக உள்ளார்.

ஃபரினா சீரியலில் இருந்து விலகுவதாகக் கூறியிருந்தாலும், அவரை வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

எனவே தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் நான் தொடர்ந்து நடிப்பேன் என ஃபரினா கூறியுள்ளார்.