எடுபட்டதா தமிழ்சினிமாவின் இரண்டாம், மூன்றாம் பாகங்கள்...? - ஒரு பார்வை

kanchana 3
ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டுமானால் அதை வலுக்கட்டாயமாக எடுக்கக்கூடாது. கதையின் அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே அதுவும் ஒரே பாகத்தில் முழு கதையையும் சொல்ல முடியாது என்கிற பட்சத்தில் தான் 2ம் பாகம் எடுக்கப்பட வேண்டும். அது இல்லாமல் முதல் பாகம் மெகா ஹிட். அதனால் 2ம் பாகம் எடுக்கலாம் என எடுத்தால் அது தோல்வியில் தான் முடியும்.
புத்திசாலிகள் எப்போதுமே புதுசு புதுசாகத் தான் சிந்திப்பார்கள். அதையும் ஒரே பாகத்தில் எடுத்து விடுவார்கள். படமும் சக்கைப் போடு போடும். ஆனாலும் என்ன ஆச்சரியம் என்று தெரியவில்லை. எத்தனை படங்கள் சோடை போனாலும் நம்மவர்கள் 2ம் பாகத்தை எடுக்கத் தவறுவதில்லை. ஒரு வேளை தமிழ்சினிமாவில் கதைக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டது போலும் என்று தான் எண்ண வேண்டியுள்ளது.

singam 3
இப்போதெல்லாம் எந்தப்படத்தை எடுத்தாலும் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது. இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது முதல் பாகத்தில் உள்ள சுவாரசியம் வருவதில்லை.
எப்போதுமே பர்ஸ்ட் இஸ் பெஸ்ட். இதற்கு காரணம் இதுதான். அதாவது, முதல் பாகம் இயல்பாக இருக்கும். இரண்டாம் பாகம் என்றதும் அதையும் எப்படியாவது வெற்றிகரமாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இயல்பை மீறி படம் எடுத்து விடுகிறார்கள்.
இது தோல்வியில் போய் முடிந்து விடுகிறது. சில படங்கள் விதிவிலக்காக 2ம் பாகமும் வெற்றிகரமாக ஓடி விடுகிறது. உடனே 3ம் பாகம் எடுத்துவிடலாமே என்று எண்ணத் தோன்றுகிறது. 2ல் தப்பித்தவர்கள் 3ம் பாகத்தில் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு வேற ஒண்ணுமே தெரியாதா என ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்து விடுகின்றனர். எவ்வளவு நல்ல படமாக வந்தாலும் முதல் படம் தான் அங்கு விஞ்சி நிற்கிறது.
அதற்கு காரணம் நமது மூளை எப்போதுமே பிரஷ்ஷாகத் தான் சிந்திக்கும். அதைத்தான் விரும்பும். உதாரணத்திற்கு காய்கறி, பழங்கள் என்றாலும் கூட பிரஷ்ஷாக உள்ளதா, ஓட்டலில் வடை, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, புரோட்டா, பிரியாணி என எந்த வகையான உணவு என்றாலும் சூடாக இருக்கிறதா என்று தான் பார்க்கும். அதுபோல தான் தமிழ்ப்படங்களையும் தரம்பிரிக்கிறது நம் மூளை.

vishwaroop2
உதாரணத்திற்கு சிங்கம் படம் முதல் பாகத்தைப் போல அடுத்து வந்த இருபாகங்களும் இல்லை. அதே போல முனி, காஞ்சனா, படங்களைப் போல காஞ்சனா 2, 3ம் பாகங்கள் எடுபடவில்லை. ரசிக்க வைத்தாலும் அரைத்த மாவை அரைப்போமா என்ற ரீதியில் தான் கதை அமைந்துள்ளது.
விஸ்வரூபம் 2 படம் ஆளை விட்டால் போதும்டா சாமி என்ற அளவில் உள்ளது. மற்றபடி பிரம்மாண்டங்களுக்கு எல்லாம் பஞ்சமில்லை. அதே போல பாகுபலி படத்தை எடுத்துக் கொண்டால் முதல் பாகத்தில் உள்ள ரசனை 2ம் பாகத்தில் இல்லை.
அதே போல தான் தமிழ்சினிமாவில் பல படங்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை - 600028, தமிழ்ப்படம் 2,வெண்ணிலா கபடி குழு, வில்லா, கோ 2, பில்லா படங்களில் பில்லா 1 மாதிரி பில்லா 2, இல்லை. இந்;தவரிசையில் ரஜினிகாந்த் நடித்த பில்லா செம மாஸாக இருந்தது எனலாம்.

chandramuki 2
சீக்குவல் என்றால் ஒரு படத்தின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் இருக்கும். பாகுபலி, கேஜிஎப் படங்களைச் சொல்லலாம். முதல் பாகம் எழுதும்போதே 2ம் பாகமும் எழுதியிருப்பாங்க. தற்போது இந்த வரிசையில் பொன்னியின் செல்வன் படமும் சேர்ந்துள்ளது. இதன் 2ம் பாகமும் தயாராகிக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பார்ட் 2 படங்கள் இன்னொரு வகையில் பாரக்கும்போது எவ்விதத் தொடர்ச்சியும் இல்லாமல் வந்து நிற்கும். இவை வெகுவாக ரசிக்காது. உதாரணத்திற்கு தில்லுக்கு துட்டு 2, இருட்டு அறையில் முரட்டு குத்து 2, அரண்மனை 2, 3, காஞ்சனா 3, கலகலப்பு 2 போன்ற படங்களைச் சொல்லலாம். இதுபோன்ற படங்கள் பலத்த தோல்வியைச் சந்திக்கும்.
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படமும் 2ம் பாகம் தயாராக உள்ளது. மாபியா சேப்டர் 2, அரண்மனை 3 , காஞ்சனா 4 ஆகிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
எந்திரன் 2, டார்லிங் 2, சண்டைக்கோழி 2, மாரி 2, கும்கி 2, கலகலப்பு 2, சாமி 2, அரண்மனை 2ரகங்கள் தான். திருட்டுப்பயலே 2, இம்சை அரசன் 24ம் புலிகேசி, கோலி சோடா 2, ராஜதந்திரம் 2,
இன்னும் வரிசை காட்டி காத்து நிற்கும் படங்கள் இவை. கேஜிஎப் சாப்டர் 2, வடசென்னை 2, துப்பறிவாளன் 2, கைதி 2, இந்தியன் 2, மாயவன் 2, இன்று நேற்று நாளை 2, ராட்சசன் 2, இரும்புத்திரை 2, பிச்சைக்காரன் 2, சதுரங்க வேட்டை 2, தனி ஒருவன் 2, மிருதன் 2, போகன் 2, சந்திரமுகி 2, புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2, விண்ணைத்தாண்டி வருவாயா 2, துப்பாக்கி 2, அப்பா 2
பொறுத்திருந்து பார்ப்போம். இவையாவது வெற்றிவாகை சூடுமா என்று.