கோகுலத்து கண்ணா கண்ணா....சீதை இவள் தானா...?! இப்போது பார்த்தாலும் இந்தப்படத்திற்கு நாம் அடிமை தான்..!

by sankaran v |   ( Updated:2022-08-18 18:31:42  )
கோகுலத்து கண்ணா கண்ணா....சீதை இவள் தானா...?! இப்போது பார்த்தாலும் இந்தப்படத்திற்கு நாம் அடிமை தான்..!
X

Gokulathil seethai

பார்க்காமலே காதல் கதையை எடுத்து சாதனை படைத்த இயக்குனர் அகத்தியன். இவரது கைவண்ணத்தில் மிளிர்ந்த மற்றொரு படம் இந்த கோகுலத்தில் சீதை. யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. 1995ல் வெளியான இந்த படம் செம மாஸாக வந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்தது.

மணிவண்ணன், பாண்டு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை இப்போது பார்த்தாலும் நம்மை மெய்மறந்து ரசிக்க வைக்கும். அவ்வளவு உன்னதமானது நவரச நாயகன் கார்த்திக்கின் நடிப்பு. தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. அந்திமந்தாரை, எந்தன் குரல், கோகுலத்தில் கண்ணா, நிலாவே வா, சொர்க்கம் மதுவில் ஆகிய பாடல்கள் உள்ளன.

Karthick

நவரச நாயகன் கார்த்திக்கின் படங்களில் இது ஒரு புதிய பரிணாமம். முதல் 2 நாள்கள் இந்தப்படத்தைப் பற்றி அதிகமாகப் பேசப்படவில்லை. படம் ரொம்ப ஸ்லோவா போகுதுன்னு மட்டும் சொன்னாங்க. லேட் பிக் அப் ஆனது. கார்த்திக்கின் நடிப்பில் மெய்மறந்து போனார்கள் ரசிகர்கள். இந்தப்படம் நாளாக நாளாக ரசிகர்களை மிகவும் கவர ஆரம்பித்து விட்டது.

இந்தப்படம் முழுவதையும் ரசிகர்களைக் கட்டிப்போட வைத்தது கார்த்திக்கின் நடிப்பு தான். பணக்காரத் தோரணையில் ஹேண்ட்சம்மாக வந்து கலக்கினார். பெண்கள் என்றால் ஒரு போதையாய் திரியும் ஒரு இளைஞராக கார்த்திக் வலம் வருகிறார்.

படத்தின் நாயகன் நம் கண் முன் வந்து தனது கேரக்டரை நிலைநிறுத்தும் வேலையைச் செவ்வனே செய்துள்ளார். ரொம்பவும் யதார்த்தமாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்து இழுத்துள்ளார். அதேபோல் சுவலட்சுமியும் கார்த்திக்கிற்கு இணையாகப் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளார்.

கரணும் இவர்களுடன் தனது பாணியில் நடித்து தன் பங்கிற்கு திறமையைக் காட்டியுள்ளார். 26 வருடங்களுக்கு முன்பே டெபிட் கார்டு பற்றி கார்த்திக் அசால்டாகப் பேசி நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் என்கிட்ட டிக்கெட் வாங்கக் காசு இல்லே. டெபிட் கார்டு தரட்டுமான்னு கேட்பார்.

ரிஷி என்ற பெயரில் பணக்காரத் தோரணையைக் கனக்கச்சிதமாக செய்துள்ளார் நவரச நாயகன். ரொம்ப கேஷ_வலாக ரொமான்டிக் நடிப்பில் அசத்ததியிருப்பார். சுவலட்சுமியுடன் இவர் பேசும் வசனங்கள் எல்லாம் ரொம்பவே சாதாரணமாக நம்முடன் வாழ்ந்தது போன்று சூப்பராக நடித்திருப்பார்.

அவர் தவறு செய்தாலும் அவரது கதாபாத்திரத்திற்காக நாம் அதை நியாயப்படுத்தும் விதத்தில் படத்தை அழகாக எடுத்திருப்பார் இயக்குனர் அகத்தியன்.

Gokulathil seethai

ரொம்பவும் இளமைத்துள்ளல். அதே நேரம் அமைதியாக செல்லும் திரைக்கதை என முரணாக இருந்தாலும் படம் ரசிக்கும் விதத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. மணிவண்ணன் கார்த்திக்கிற்கு அப்பா. இப்படி ஒரு அப்பாவை நிஜத்தில் நாம் காண்பது அரிது. தந்தையே மகனுக்கு மது ஊற்றிக் கொடுப்பார். இறுதியில் தான் எப்படி வாழ்ந்து கொண்டு இருந்தோம் என நினைத்து வருந்தும் கார்த்திக்கின் நடிப்பு மனதை டச் செய்கிறது.

இந்தப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் கண்டிப்பாகப் பாருங்க. அவரது நடிப்பு நம்மை மிகவும் ரசிக்க வைக்கும். இந்தப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

கோகுலாஷ்டமியைக் கொண்டாடும் இந்நன்னாளில் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள கோகுலத்து கண்ணா கண்ணா என்ற பாடல் ஒரு சமர்ப்பணம். வீடுகளில் ஒலிக்கச் செய்து கேட்டு மகிழுங்கள்.

Next Story