அஜித்தை காப்பி அடிச்சேனா? என்ன வேணுனாலும் சொல்றதா.. ஃபுல் ஸ்டாப் வைத்த ராமராஜன்

Published on: April 9, 2024
ramarajan
---Advertisement---

Actor Ramarajan: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் ரஜினி, கமல் என இருபெரும் ஜாம்பவான்கள் சினிமாவை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில் ஒரு பூகம்பமாக அந்த இருவருக்கும் ஆட்டம் காட்டியவர் நடிகரும் மக்கள் நாயகனுமான ராமராஜன். கிராமத்து மண்வாசனையுடன் கூடிய தன் பேச்சால் சாமானிய மக்களின் ஒவ்வொரு நெஞ்சங்களிலும் குடி பெயர்ந்தார்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் ராமராஜன் என்று சொல்லும் போது நம் நினைவுக்கு வருவது ‘கரகாட்டக்காரன்’ படமும் ‘செண்பகமே செண்பகமே’ என்ற பாடலும்தான். ராமராஜன் கெரியரையே தூக்கிக் காட்டிய படமாக அமைந்தது கரகாட்டக்காரன் திரைப்படம். எதார்த்தமான நடிப்பு, துடுக்கத்தனமான பேச்சு என மிக எளிதாக மக்களை சென்றடைந்தார்.

இதையும் படிங்க: அரை டவுசர்ல சும்மா அள்ளுது!… அந்த அழகை அப்படியே காட்டும் ஷிவானி நாராயணன்…

இந்த நிலையில் சமீபத்தில்தான் வெளியானது ராமராஜனின் ‘சாமானியன்’ பட ட்ரெய்லர். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ராமராஜன் சொல்லிக் கொண்டே ஏகப்பட்ட பட வாய்ப்புகளை தவறவிட்டார் என்ற ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் ஹீரோவாக மட்டும் என்று சொல்லவில்லை. ஹீரோயிசமான படமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன் என ராமராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

எம்ஜிஆர் மீது அதிகளவு பற்றுக் கொண்ட ராமராஜன் எம்ஜிஆருக்கு பிறகு அவரது பெருமைகளை ஊர் அறிய செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலில் சேர்ந்தார். 2012 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ராமராஜன் கிட்டத்தட்ட கோமா நிலைக்கு சென்று விடுவார் என்றுதான் அவருடைய நிலைமை இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்து மீண்டும் சாமானியன் படம் மூலம் ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார்.

இதையும் படிங்க: நித்யா மேனன் எக்ஸ் காதலர்களை பார்க்கணுமா?.. அவங்களே இப்படி ஓப்பனா வெளியிட்டா எப்படி பாஸ்?..

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே இது துணிவு பட ஃபைட் சீன் மாதிரியே இருக்கிறதே? அஜித்தை காப்பி அடித்தாரா ராமராஜன் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த ராமராஜன் அவருடைய எதார்த்தமான பேச்சாலேயே ‘ஏங்க என் பட சூட்டிங் நடந்தப்போதான் அஜித்தின் துணிவு பட சூட்டிங்கும் மௌண்ட் ரோட்டில் நடந்தது. ஒரே நேரத்தில்தான் இரண்டு பட சூட்டிங்கும் நடந்தது. இதுல எப்படிங்க நான் காப்பி அடிப்பேன்’ என்று ஒரு சின்ன குழந்தை பொல பதிலளித்தார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.