பாக்கியராஜின் சீடர்கள் தான் பாண்டியராஜனும், பார்த்திபனும். இருவரும் 2 படங்கள் இயக்கியதுமே நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதே போல கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடிப்பவர்கள் பாக்கியராஜ், டி.ராஜேந்தர். இவர்களது படங்களில் குறிப்பாக உறவுச்சிக்கல்கள் பிரதானமாக இடம்பெறும்.
பயந்த சுபாவ ஹீரோ
Also read: சூர்யாவின் பாலிவுட் கனவை காலி செய்த கங்குவா!.. என்ன ஆச்சுனு இம்புட்டு பண்ணுறீங்க?
அதே போல அந்த சிக்கலையே கொஞ்சம் சீரியஸாகக் கொண்டு போய் தீர்த்து விடுவார்கள். அதே நேரம் பாண்டியராஜன் அந்தப் பிரச்சனையை மிக எளிதாக தீர்த்து விடுவார். இவரது பாணியில் குசும்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஹீரோன்னு பார்த்தா பயந்த சுபாவமாக இருப்பார். ஆனா ரொம்ப நல்லவனாகவும் இருப்பார்.
வித்தியாசம்
பாக்கியராஜ் படத்திலும் இதே பாணி தான். இருவருக்கும் என்ன வித்தியாசம்னா பாக்கியராஜ் கேரக்டரில் எமோஷனல் அதிகமா இருக்கும். பாண்டியராஜன் கேரக்டரில் அப்படி இருக்காது. அதே நேரம் பார்த்திபன் படங்களில் இயல்புத்தன்மை கம்மியா இருக்கும். ஆனா பேன்டஸியைக் கலந்துருப்பார்.
பார்த்திபனும், பாண்டியராஜனும் ஆரம்பத்திலேயே நடிக்க வந்துவிட்டார்கள். அதனால் பிற்காலத்தில் அவர்கள் இயக்கிய படங்கள் சரியாக எடுபடவில்லை. ஆனால் அவர்கள் இயக்கிய ஆரம்பகாலப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆண்பாவம், கதாநாயகன், ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன், பாட்டி சொல்லைத் தட்டாதே படங்களே இதற்கு உதாரணம். பார்த்திபனுக்கு முதல் படம் புதியபாதை. இயக்கி நடித்தும் இருந்தார். சூப்பர்ஹிட் ஆனது.
மார்க்கெட் அவுட்
பாண்டியராஜனுக்கு மார்க்கெட் அவுட் ஆனதற்கு முக்கிய காரணமே அவர் படங்களில் நடித்தால் அவராகவே தான் தெரிவார். அவரது பாடி லாங்குவேஜ், டயலாக் பேசுவது என எதிலும் மாற்றத்தைக் கொண்டு வரமாட்டார். எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் நடிப்பார்.
Also read: அஜித், சூர்யா, தனுஷை ஓவர் டேக் செய்த எஸ்.கே!… அடுத்த விஜயா இல்ல சூப்பர்ஸ்டாரா?!…
அதே போல அவருக்குப் பொருந்துற மாதிரியான படங்களில் நடிப்பார். அதுபோன்ற கதைகளையே தேர்ந்தெடுப்பார். அதே நேரம் அவர் நடிப்பது போல நடிக்க பல புதிய நடிகர்கள் வந்துவிட்டதால் அவர் காணாமல் போய்விட்டார்.
Sun serials:…
ஞானவேல் ராஜா…
Biggboss Tamil:…
Thalapathy 69:…
கங்குவா படத்தின்…