Cinema History
இளையராஜா பயோபிக்கில் இத்தனை சவால்களா?.. மலைப்பா இருக்கே!. எப்படி எடுக்க போறாங்க?!…
இளையராஜா இசை வரலாறு படமாக்கும் போது அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. இதை அருண்மாதேஸ்வரன் இயக்குகிறார். இசைஞானி வாழும்போதே அதை படமாக்குவது பெருமையான விஷயம்.
இசைஞானியின் இசையைக் கடந்து எந்த மனிதனும் இருக்க முடியாது. இரவு நேரங்களிலும் பல கலைஞர்களுக்கு இது உந்து சக்தியாக இருக்கிறது. இளையராஜா வாழும் காலத்தில் இந்த பயோபிக் வருவதால் இது பல சவால்களை சந்திக்கக்கூடியதாக உள்ளது. அவருக்கு 83வயது. அவரது இளமை காலம் முதல் இப்போது வரை உள்ள வாழ்க்கையை படமாக்க வேண்டியுள்ளது. அவர் இசைத்துறைக்கு வர காரணம் அவரது அண்ணன் பாவலர் வரதராஜன்.
அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் எல்லா மேடைகளிலும் அவரே மெட்டு போட்டு பாடல் எழுதிப் பாடுவார். இது தான் இளையராஜா இசை அமைக்க அடித்தள காரணமானது. அவரது தம்பி கங்கை அமரன் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி கொஞ்சம் புறம்பான செய்திகளை எல்லாம் அள்ளி விடுவார். குறிப்பாக ஐ.மாயாண்டி பாரதி எங்களைத் தங்கவிடவில்லை என்றாராம். ஏன்னா அவர் தன்னலமற்றவர். இவர் வீட்டில் தான் இன்று கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமே உள்ளது. அவர் சுதந்திரத்திற்காக திருமணமே பண்ணாமல் இருந்தாராம்.
இந்த இடத்தைப் படத்தில் எப்படி காட்டப் போறாங்கங்கறது முக்கியம். பல கவிஞர்கள், பல தலைமுறை நடிகர்கள், பாடலாசிரியர்கள் என எல்லாரையும் காட்ட வேண்டியுள்ளது. இளையராஜா வைரமுத்து, கண்ணதாசன், எம்எஸ்.வி. கூட்டணி பற்றி எப்படி காட்டுவார்கள்?
இளையராஜா, வைரமுத்து 6 ஆண்டு கால நட்பு தான் என்றாலும் அதை எப்படி காட்டுவார்கள்? இருவரும் பேசி 40 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இது எந்த அளவுக்கு உண்மைத்தன்மையோடு காட்டுவார்கள்? முரண்பாடு வந்தால் பல சிக்கல்கள் உருவாகலாம். ஆரம்பத்தில் மாரி செல்வராஜ் இயக்கப் போவதாக சொன்னார்கள்.
அருண்மாதேஸ்வரன் இதுவரை கலைத்தன்மை உள்ள படம் எதையும் எடுக்கவில்லை. அப்படி இருக்க கலையாகவே வாழும் இசைஞானியின் வாழ்க்கையை அவர் எப்படி இயக்கப் போகிறார்? மாரி செல்வராஜ், இளையராஜா இருவரும் ஒரே சமூகம் என்பதால் படத்தை இயக்க அவர் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இளையராஜாவோ ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவராக விளங்குகிறார்.
இப்படி இருக்க அவர் ஏன் அப்படி சொல்ல வேண்டும்? இப்படி பல சவால்கள் படத்தை எடுப்பதில் உள்ளன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி படத்தில் இளையராஜாவின் வாழ்க்கையை 100 சதவீதம் நேர்மையாகவும், 100 சதவீதம் கலைத்தன்மையோடும் தெளிவாகக் காட்டினால் அதுதான் அவருக்குக் கொடுக்கக்கூடிய மரியாதை. இளையராஜா பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவல்களை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.