More
Categories: Cinema News latest news

இந்தியன் 2 படத்தின் பலவீனமான திரைக்கதைக்கு என்ன காரணம்? உள்ளதை ஓப்பனாக சொன்ன பிரபலம்

இந்தியன் 2 படத்தைப் பற்றி நெகடிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்த வண்ணம் உள்ளன. அதே நேரம் அந்தப் படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை வெளிப்படையாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

இந்தியன் 2 படத்தின் நீளம் 3 மணி நேரம். அதுவும் சுவாரசியமாக இல்லை. 75 சதவீத கதை வந்து எல்லாருக்கும் தெரியும். புதுசா ஒண்ணுமே இல்ல. வெளிநாட்டுக்குப் போயிருக்குற தாத்தா மீண்டும் இந்தியா திரும்பி வர்றாரு. இங்க இப்ப லஞ்சம் வாங்கறவங்கள போட்டுத் தள்ளப் போறாரு. இதைத் தெரிஞ்சித் தான் படத்துக்கு ரசிகன் வர்றான்.

Advertising
Advertising

இந்தப் படத்துல உள்ள சின்ன சுவாரசியம் என்னன்னா இவரு எப்படி வரப்போறாரு? எப்படி களை எடுக்கப் போறாரு? என்பது தான். இதை சுவாரசியமாக சொல்லப்படவில்லை என்பது தான் உண்மை.

இந்தியன் 2 இந்தியன் 3 வரை நீண்டது தான் இந்தியன் 2 படத்தின் வீழ்ச்சிக்குக் காரணம். இரண்டு பாகமும் சேர்ந்து ஒரே படமாக வந்திருந்தால் படம் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கும். இந்தியன் 3 ஆகவும் விட்டால் அதன் மூலமாகவும் காசு கிடைக்கும் என்று நினைத்தது தான் படத்தின் தோல்விக்குக் காரணம். இதுதான் வெளிப்படையான உண்மை.

Indian 2

இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 3 தான் சூப்பராக இருக்கும் என்று சொன்னார்கள். அதுல தான் லட்டு மாதிரியான காட்சி எல்லாம் போயிருக்கு. சக்கை எல்லாம் இந்தியன் 2ல வந்துடுச்சு.

எழுத்தாளர் சுஜாதா இல்லாததும் இயக்குனர் ஷங்கருக்குப் பெரிய இழப்பு தான். அவர் ஷங்கரை ஒரு டைரக்டராக மட்டும் தான் பார்த்தார். ஆனால் இன்றைக்கு சுஜாதா இடத்தில் வருகிறவர்கள் ஷங்கரை பிரமிப்பாகப் பார்க்கிறார்கள். அவர் மொக்கை ஐடியாவைக் கொடுத்தால் கூட அதை வேணாம்னு சொல்கிற துணிச்சல் யாருக்கும் இல்லை. அதுவும் தான் இந்தப் படத்தின் திரைக்கதை பலகீனமாக வந்ததற்குக் காரணம்.

ஷங்கர் உச்சத்திற்குச் சென்றபின் அவருக்கு நாம வைக்கிறது தான் சீன். நாம வைக்கிறது தான் டயலாக் என்ற மனநிலை வந்து விட்டது. அதனால இந்த மாதிரி தவறுகள் எல்லாம் அவருக்குத் தவறு என்றே தெரியாமல் போய்விட்டது.

ஷங்கர் எப்போதுமே சுஜாதா, பாலகுமாரன் போன்ற உயர்சாதி எழுத்தாளர்களுடன் பயணித்ததால் அவருடைய பார்வை வலதுசாரி கொண்ட பார்வையாகவே மாறிவிட்டது. உதாரணத்திற்கு மீனை எடை போடும்போது கூட அதன் வாயில் கோலிக்குண்டைப் போட்டு ஏமாற்றுவது போன்ற காட்சிகள் எல்லாம் காட்டப்படுகிறது. ஊழல் முதலைகள் எல்லாம் இருக்கிற நாட்டில் மீன்காரி எடையில் ஏமாற்றுகிறார் என்பதா அதிசயம்?

99சதவீத இயக்குனர்களின் பார்வை பெண்கள், சிறுபான்மையினர், திருநங்கையர், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் குறித்தும் இவர்களின் பார்வை குறைபாடாகத் தான் இருக்கிறது. சிறந்த படம் எடுக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. சமூகப் பொறுப்பும் இருக்கணும். அது பல இயக்குனர்களிடமும் இல்லை. ஷங்கரிடமும் இல்லை.

மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Published by
sankaran v