தமிழில் உள்ள அதிக வசூல் கொடுக்கும் பெரும் கதாநாயகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகர்களில் ரஜினி, விஜய்க்கு பிறகு அஜித்தான் இருக்கிறார். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்தவர் அஜித்.
ஆரம்ப கட்டத்தில் விஜய் போலவே அஜித்தும் காதல் கதாநாயகராகதான் நடித்து வந்தார். அதிக படங்களில் இவர்கள் இருவருமே காதலை மைய கதையாக வைத்து படங்களில் நடித்திருந்தனர்.
அப்போதைய காலகட்டத்தில் சினிமாவில் நகைச்சுவைக்கும் முக்கியமான இடம் இருந்தது. எனவே கதாநாயகன் இருந்தாலும் அந்த படத்தில் அவர்களுக்கு நண்பர்களாக நகைச்சுவை நடிகர்கள் இருப்பது போல காட்சிகள் இருக்கும்.
அப்படி அஜித்துடன் அதிக படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா. ரமேஷ் கண்ணா தமிழ் சினிமாவிற்கு உதவி இயக்குனராக வந்தவர். கே.எஸ் ரவிக்குமாரிடம் பல நாட்கள் உதவி இயக்குனராக இவர் இருந்தார்.
அதே சமயம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபத்திரமாகவும் பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக இயக்குனர் விக்ரமன் திரைப்படங்களில் அதிகமாக ரமேஷ் கண்ணாவை பார்க்க முடியும்.
அஜித்துடன் அதிக படங்களில் ரமேஷ் கண்ணா நடித்து வந்தார். ஆனால் வீரம் திரைப்படத்திற்குப் பிறகு அஜித்துடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் ரமேஷ் கண்ணாவிற்கு கிடைக்கவில்லை. இது குறித்த ஒரு பேட்டியில் கூறும் பொழுது வீரம் படத்திற்குப் பிறகு அஜித் என்னை கூப்பிடவில்லை.
இப்பொழுது வரும் சினிமாக்களில் நகைச்சுவை நடிகர்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை. அதேபோல அஜித்தும் நகைச்சுவை இல்லாத திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதனால் அவர் நடிக்கும் படங்களில் என்னை கூப்பிடுவதையும் நிறுத்திவிட்டார் என பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுலையே அதை முதன் முதலில் செய்தவர் ஏ.ஆர் ரகுமான்தான்..! – செண்டிமெண்டாக செய்த காரியம்…
சூர்யாவின் படங்கள்…
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…