போட்டிக்கு வர்ற கங்குவா படத்தைப் பற்றி ரஜினி என்ன நினைப்பாரு? வேற லெவல் திங்கிங்..!
இந்தியன் 2 படத்தின் தோல்விக்குப் பிறகு லைகா ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதனால் தான் ரஜினியின் வேட்டையன் படத்திற்கான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதே போல சூர்யாவின் கங்குவாவும் அதே நாளில் அதாவது அக்டோபர் 10ல் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளது.
இரு படங்களுக்கும் சரியான போட்டி. இருந்தாலும் ரஜினி அதைப் பற்றி என்ன நினைப்பார் என்று சினிமா சிவா தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
Also read: கேமியோ ரோல் தேவையா? அது திணிக்கப்படுகிறதா? இதென்ன புது கலாச்சாரம்?
வேட்டையன் டப்பிங் வீடியோவை லைகா வெளியிட்டுருக்காங்க. ஒரே ஒரு பிரேம்ல ரஜினி சொல்லிட்டாரு. ஜெயிலருக்கு அப்புறம் வருவதால பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. பொதுவாகவே ரஜினி வந்து பெரிய மோட்டிவேட்டர். டைரக்டரோட சாய்ஸ்சுக்கு விட்டுட்டு ஆப்ஷன்ஸ் கொடுப்பார்.
மனம் திறந்து புகழ்வதில் வல்லவர். பேட்ட படத்துக்கு அனிருத்தோட மியூசிக்கை நல்லாருக்கேன்னு புகழ்ந்தார். தர்பார்ல சும்மா கிழி பாடல் கிழி கிழின்னு கிழிக்கப்போகுதுன்னு சொன்னார். ஒரு பெரிய நடிகர் ஒரு இயக்குனரை இந்தளவு அங்கீகரிக்கிறார்னா அது பெரிய பாடம்.
கங்குவா அவரு படத்துக்கு கூட சேர்ந்து ரிலீஸாகுது. இந்த இடத்துல சூப்பர்ஸ்டார் என்ன சொல்வாருன்னா கங்குவாவும் நம்ம படம் தான். வேட்டையனும் நம்ம படம் தான். அதனால நாம ரசிக்கிறோம். கொண்டாடறோம்னு தான் சொல்வாரு.
Also read: என் வயசு என்ன? எனக்கே நடந்திருக்கு.. இந்த வயசு நடிகையுமா அவங்க விடல?
ஈகோ பார்க்க மாட்டாரு. அடுத்தவங்க வளர்ச்சசில அவரு பொறாமைப்படற ஆளு இல்ல. வேட்டையன் படம் வந்து தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஏரியாக்களில் நடக்கிற கதை. இது சமூகம் சார்ந்த கதை. அதுவும் கிரைம். அதையும் தாண்டி ஒரு சோசியல் மெசேஜ். உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கிறாங்க.
எனக்குத் தெரிஞ்சி த.செ.ஞானவேல் மேல எனக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை. அது மாதிரி ரஜினி படம் பவர்புல்லா போகும்கற நம்பிக்கை இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.