தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நிகழ்வுகளில் முக்கியமானது எம்.ஜி.ஆரினை எம்.ஆர்.ராதா சுட்டது தான். அன்று என்ன நடந்தது என்ற சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக.
1967 ஜனவரி மாதத்தில் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் தாய்க்குத் தலைமகன் படம் எம்ஜிஅர் நடிப்பில் வெளியானது. நல்ல வரவேற்பு படத்திற்கு கிடைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அன்று மாலையே எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரைச் சுட்டதாக தகவல் தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. மொத்த மாநிலத்தினையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.
எம்.ஜி.ஆர்
`பெற்றால்தான் பிள்ளையா’ படத்தை எம்.ஆர்.ராதாவின் நண்பர் வாசு தயாரித்திருந்தார். இதற்கு ராதாவும் 1 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தாராம். படம் வெளியாகி அந்த காசினை கேட்ட போது, எம்.ஜி.ஆரால் நிறைய செலவுகள் ஆகிவிட்டதாக கூறி இருக்கிறார். இதுகுறித்து ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரினை சந்திக்க எம்.ஆர். ராதா மற்றும் வாசு சென்றனர்.
அப்போது சந்திப்பு விவாதமாக மாறியதாம். தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினை எடுத்து எம்.ஜி.ஆரை சுட்டு விட்டார். அதில் அவரின் தொண்டையில் குண்டு பாய்ந்ததாம். அதன்பின்னர், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு எம்.ஆர்.ராதா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இருவரும் சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைந்தனர். இந்த சம்பவத்தால் எம்.ஜி.ஆரின் குரல் மொத்தமாக பாதித்தது.
இந்த சம்பவத்திற்கு எம்.ஆர்.ராதா மீது வழக்கு தொடரப்பட்டது. பல நாட்கள் நடந்த விசாரணையில் அவருக்கு 7 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டது. மேல்முறையீடு மற்றும் நன்னடத்தை காரணமாக நான்கரை வருடத்தில் சிறையில் இருந்து வெளிவந்தார் எம்.ஆர்.ராதா.
டிவி பேட்டி…
தமிழ் சினிமாவில்…
Kamalhaasan: 4…
SK 25:…
பிலிம் இன்ஸ்டிட்யூட்…