ஓவர் சீன் போட்ட விசித்ரா!... முடியாது என அடம் பிடித்த தினேஷ்… அண்டாகாகசம் நிகழ்ச்சியில் என்ன தான் நடந்தது?

by Akhilan |
ஓவர் சீன் போட்ட விசித்ரா!... முடியாது என அடம் பிடித்த தினேஷ்… அண்டாகாகசம் நிகழ்ச்சியில் என்ன தான் நடந்தது?
X

Vichitra: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோதிக்கொண்டது போல விஜய் டிவியின் அண்டாகாகசம் நிகழ்ச்சியிலும் விசித்ரா மற்றும் தினேஷ் இடையே பிரச்னை நடந்ததாக தகவல்கள் கசிந்தது. ஆனால் உண்மையில் அந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன தான் நடந்தது என்பது குறித்து தினேஷே தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

அண்டாகாகசம் நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்து இருந்தனர். நான், விஷ்ணு, ரவீனா ஒரு டீமாகவும் விசித்ரா, அனன்யா, அக்‌ஷயா ஒரு டீமாகவும் விளையாடுவதாக தான் பிளான். நாங்க செட்டுக்கு வந்துவிட்டோம். விசித்ரா வந்தவர்கள் என்னையும், விஷ்ணுவையும் அவர் டீமுக்கு கேட்டார்.

இதையும் படிங்க: நாலா பக்கமும் ரோகினியை சுற்றி வளைத்த பிரச்னை… இப்பையாது மாட்டி விடுங்களேன்பா!

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அவருடன் இணைந்து நடனம் ஆடக்கூட நான் தயாரா இல்லை. இதனால் அதற்கு மறுப்பு சொல்லிவிட்டேன். ஆனால் டீம் விசித்ராவிடம் சொன்ன போது அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. தொடர்ந்து தினேஷாவது என் டீம் வேண்டும் என்றார். நான் முடியவே முடியாது என மறுத்துவிட்டேன்.

இந்த பிரச்னையே 2 முதல் 3 மணி நேரம் நீடித்தது. ஒரு கட்டத்தில் விசித்ரா, தினேஷ் என் டீமில் இருந்தால் நான் விளையாடுவேன். இல்லையென்றால் நான் கிளம்பிவிடுவேன் என்ற நிலைக்கு சென்று விட்டார். நான் அதற்கு கடைசி வரை ஒப்புக்கொள்ளவே இல்லை. அவரும் கிளம்பிவிட்டார்.

கடைசியில் ரவீனாவுடன் வந்த தோழியை வைத்து அந்த நிகழ்ச்சியை முடித்தனர். ஆனால் அந்த ஷோவின் ஷூட்டிங்கின் மூன்றாவது சுற்று சென்று கொண்டு இருக்கும் போதே நான் அவரை அசிங்கப்படுத்தியதாகவும் அதனால் விசித்ரா கோவித்து கொண்டு கிளம்பியதாக ஒரு தகவல் கசிந்தது. அப்படி எதுவுமே அங்கு நடக்கவே இல்லை.

இதையும் படிங்க: வரீங்களா? இல்லையா? விஷால் செய்வது மட்டுமல்ல சொல்றதை கூட குழப்பிவிடுறாரே?

ஷூட்டிங்கே முடியாமல் இப்படி யார் பரப்புவார்கள். இதனால் நான் அவர் டீமில் விளையாடவே விரும்பவில்லை என்றும் தினேஷ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story