உடையில்லாமல் ஆபாச வீடியோக்களை வெளியிடும் மாநகரம் நடிகர்... என்ன நடந்தது இவருக்கு?

by Akhilan |
உடையில்லாமல் ஆபாச வீடியோக்களை வெளியிடும் மாநகரம் நடிகர்... என்ன நடந்தது இவருக்கு?
X

shri2

Managaram: தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் ஒன்று அல்லது இரண்டு படம் மட்டுமே நடித்து இருந்தாலும் மிகப்பெரிய புகழை பெறுவார்கள். அப்படி ஒரு நடிகர் செய்யும் விஷயங்கள் திடீரென ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர் சக்தி. பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9 படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்படமே அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதை தொடர்ந்து மிஷ்கினின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை கொடுக்கவே இல்லை. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் நடித்தார்.

அப்படம் மீண்டும் இவரின் கேரியரை தூக்கி விட்டது. பிக்பாஸ் தமிழ் சீசன் 1ல் கலந்துக்கொண்டார். இருந்தும் ஒரே நாளில் தன்னால் இங்கு இருக்கவே முடியாது எனக் கூறி வெளியேறிவிட்டார். அப்போதே சிலர் இவருக்கு மன அழுத்த பிரச்னை இருப்பதாக கூறி வந்தனர்.

கடந்தாண்டு கூட இவர் நடிப்பில் வெளியான இறுகப்பற்று நல்ல விமர்சனங்களை குவித்து இருக்கும் நிலையில் திடீரென ஸ்ரீ தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சில வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். உடல் இளைத்து தலையில் கலர் அடித்து பார்ப்பதற்கே மோசமாக இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் உடை இல்லாமல் கூட புகைப்படத்தினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். இதனால் திடீரென ஸ்ரீக்கு என்னவானது. மீண்டும் எதாவது மனநல பிரச்னையா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அல்லது வாய்ப்பு இல்லாததால் தன் மீது கவனம் வர இப்படி செய்கிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

Next Story