இப்பெல்லாம் அந்த வார்த்தைய கேட்டாலே பயமா இருக்கு - ரோட்டில் சென்ற பெண்ணிடம் கலாய் வாங்கிய கார்த்தி!
நடிகர் கார்த்தி முதன் முதலாக அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதில் அவர் வெளிப்படுத்தியிருந்த அற்புதமான நடிப்பின் காரணமாக வந்த உடனேயே பிரபலமடைந்தார்.
கிட்டத்தட்ட அந்த கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டுதான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும் கார்த்தி கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதற்கு பிறகு கார்த்தி நடித்த அடுத்த படம் பையா. பையா திரைப்படத்தில் முற்றிலுமாக மாறி ஒரு சாக்லேட் பாய் போன்ற தோற்றத்தில் கார்த்தி இருப்பார்.
பையா படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. பையா படத்தில் கார்த்தி நடித்துக்கொண்டிருந்தபோது அவரின் உண்மை முகம் யாருக்கும் தெரியாது. பருத்தி வீரன் திரைப்படத்தில் உள்ள முகம்தான் பலருக்கும் தெரியும். காரை ஓட்டிக்கொண்டு வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது அந்த பக்கமாக சென்ற ஒரு பெண் தமன்னாவை பார்த்தவுடன் கண்டுப்பிடித்துவிட்டார். வேகமாக தமன்னாவிடம் வந்தவர் “மேடம் உங்களை எனக்கு தெரியும். நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க” எனக் கூறியுள்ளார். உடனே தமன்னா கார்த்தியை காட்டி இவரும் நடிகர்தான் பருத்திவீரன் படத்துல நடிச்சிருக்கார் இல்லையா? அவர்தான் என கூற, அந்த பெண் அப்போதுதான் கார்த்தியை பார்த்தார்.
உடனே கார்த்தியை அடையாளம் கண்டுக்கொண்டு நீங்களும் அழகா இருக்கீங்க சார் என கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு தினசரி காலையில் படப்பிடிப்பு துவங்கும் போதெல்லாம் கார்த்தியை இதை சொல்லியே கலாய்த்துள்ளார் தமன்னா.
ஒரு பேட்டியில் இதை கூறிய கார்த்தி. ”இப்போதெல்லாம் யாராவது நீங்க அழகா இருக்கீங்க”ன்னு சொன்னாலே பயமா இருக்கு என கூறியுள்ளார்.