வீட்டில் தீ.. தீயணைப்பு வீரர்களை உள்ளே விடாத கனகா.. அவருக்கு என்னதான் ஆச்சு...

kanaga
சிவாஜியுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் தேவிகா. கருப்பு வெள்ளை காலத்தில் அழகிய கதாநாயகியாக வலம் வந்தவர். இவரின் மகள்தான் நடிகை கனகா. கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க அம்மணிக்கு வாய்ப்புகள் கொட்டியது.

devika
ரஜினி, பிரபு, கார்த்திக் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். தாய் தேவிகா இறந்தபின் சில படங்களில் மட்டும் நடித்த கனகா திடீரென சினிமாவிலிருந்து விலகினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பங்களாவில் தனியாக வசித்து வருகிறார்.
தன்னை ஒருவர் காதலித்ததாகவும், அவருடன் லிவ்விங் டூ கெதரில் இருந்ததாகவும், ஆனால், காதலர் என்னை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். அவரை தேடிக்கொண்டிருக்கிறேன் எனவும் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் கனகாவே கூறினார். ஆனால், அவரை பற்றிய தகவலை சொல்லவும், புகைப்படத்தை வெளியிடவும் மறுத்துவிட்டார்.

kanaga
ஆனால், கடந்த சில வருடங்களாக கனகா யாரையும் சந்திப்பதில்லை, ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதில்லை, யாருடனும் பேசுவதும் இல்லை. அந்த பங்களாவிலிருந்து வெளிவருவதும் இல்லை. அந்த வீட்டில் ஒரே ஒரு பெண் ஊழியர் மட்டும் இருப்பதாகவும் அவருடன் மட்டுமே கனகா பேசுவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று அணைத்தனர். அவரது வீட்டில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பதற்கான சரியான காரணத்தை கனகா தெரிவிக்கவில்லை. அதோடு, தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டிற்குள் சென்றபோது அவர்களை உள்ளே விடாமல் கத்தி கூச்சலிட்டுள்ளார் கனகா. எனவே, அவரை ஒரு அறையில் அடைத்துவிட்டுதான் வீட்டிற்குள் இருந்த தீயை அணைத்துவிட்டுதான் தீயணைப்பு வீரர்கள் சென்றதாக செய்திகள் கசிந்துள்ளது. கனகா பல வருடங்களாகவே மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது. அந்த வீட்டை விலைக்கு வாங்க பலர் முயன்றும் அவர் யாருக்கும் விற்க முன்வரவில்லை.

fire
அந்த மர்ம பங்களாவில் கனகா என்னதான் செய்கிறார்?. அவர் ஏன் யாரிடமும் பேசுவதில்லை?.. தீயணைப்பு வீரர்களை ஏன் அவர் உள்ளே அனுமதிக்கவில்லை?.. அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என பல கேள்விகள் எழுகிறது.
ஆனால், பதில் சொல்லத்தான் ஒருவரும் இல்லை!...
இதையும் படிங்க: அந்த பம்பரத்தை எடுங்கடா!.. தொப்புளை காட்டி வெறியேத்தும் சயானி பிரதன்…