இட்லி கடை பஞ்சாயத்து இதுதான்.. மனம் இறங்கி வந்தாரா தனுஷ்? - உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்!

by Giri |   ( Updated:2025-04-10 07:54:37  )
dhanush 1
X

Dhanush

தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை நிறுத்த வேண்டும் என்றும், தனுஷுக்கு ரெட் கார்டு விதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் போர்க்கொடி தூக்கியிருப்பது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் இன்று வெளியாக வேண்டியிருந்த இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இட்லி கடை படத்துக்கு ஏன் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் போர்க்கொடி தூக்கியுள்ளார், தனுஷ் பஞ்சாயத்து என்னவென்பதை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் படம் நடிப்பதற்காக முன் பணம் பெற்றுள்ளார். அதன்படி ரூ.3 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக படம் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் தனுஷிடம் கால்ஷீட் கேட்டு சென்றுள்ளார் கதிரேசன்.

கால்ஷீட் கொடுப்பதாக சொன்ன தனுஷ் கூடவே ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு தனுஷின் சம்பளம் ரூ.8 கோடி அளவில் இருந்துள்ளது. மேலும் அவரின் பிசினெஸும் கம்மி. ஆனால், இன்று இரண்டுமே உச்சத்தை தொட்டுள்ளது. இப்போதுள்ள நிலையில், சாதாரணமாக தனுஷை வைத்து ரூ.100 கோடி அளவுக்கு பிசினெஸ் நடக்கிறது.

dhanush
dhanush

இதனால் இப்போதுள்ள பிசினெஸுக்கு தகுந்த மாதிரியான சம்பளத்தை தர வேண்டும் என தனுஷ் தரப்பு தயாரிப்பாளர் கதிரேஷனிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், அப்படியெல்லாம் தர முடியாது என மறுத்த கதிரேசன் ஏற்கனவே பேசப்பட்டுள்ள சம்பளம் மட்டுமே தரப்படும் எனக் கூற பிரச்சினை ஆரம்பிக்க தொடங்கியுள்ளது.

தயாரிப்பாளர் கதிரேசன் தனுஷுக்கு அட்வான்ஸ் கொடுக்கும்போது தனுஷ் தரப்பு கேட்டுக்கொண்டது வெற்றிமாறன் இயக்க வேண்டும் என்றதாம். அப்படியெனில் வெற்றிமாறன் இயக்கினால் இதே சம்பளத்துக்கு ஓகே என்று இறங்கி வந்துள்ளது. ஆனால், வெற்றி மாறன் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால், தனுஷ் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது பழைய சம்பளத்துக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என கேட்க, சரி ஆனால் வெற்றிமாறன் இயக்க வேண்டும், இல்லையென்றால் இன்றைய மார்க்கெட்டுக்கு தகுந்த சம்பளம் தர வேண்டும் என தனுஷ் கூறியிருக்கிறார்.

இரண்டுக்குமே மறுத்த தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பாளர் சங்கத்தை நாடி இட்லி கடை படத்துக்கு தடையும், தனுஷுக்கு ரெட் கார்டு விதிக்க வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்துள்ளார். அப்படி இப்படி நடந்த பேச்சுவார்த்தையில் செட்டில்மென்ட் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.6 கோடி வரை செட்டில் செய்ய தனுஷ் முன்வந்துள்ளார். ஆனால் கதிரேசனோ ரூ.16 கோடி தர வேண்டும் எனக் கூற ஆர்கே செல்வமணி பேச்சுவார்த்தைக்கு செல்ல ரூ.8 கோடி வரை கொடுக்க தனுஷ் இறங்கிவந்துள்ளார். ஆனாலும் கதிரேசன் ஒப்புக்கொள்ளாமல் இட்டிலி கடை படத்துக்கு பிரச்சினை கொடுத்து வருகிறாராம். இதனை சுரேஷ் காமாட்சி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Next Story