Connect with us
Kalki 2898 AD

Cinema News

கல்கி படத்துல அதென்ன 2898? என்ன தான் சொல்ல வர்றாங்க? பிரபலம் தகவல்

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல், தீபிகா படுகோன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் கல்கி. அனைவரும் எதிர்பார்த்த இந்தப் படம் இன்று ரிலீஸ். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கல்கி 2898 AD படத்துக்கு ஆரம்பத்துல இருந்தே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதுக்கு பிரபாஸ்சுக்கு இது முக்கியமான படம். ஒரு முக்கிய காரணம். பாகுபலிக்கு அப்புறம் அவரது படங்கள் சரியா போகல. சலார், ஆதிபுருஷ் படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு சரியாகப் போகவில்லை.

இதையும் படிங்க… பொண்டாட்டி திட்டுவா வீட்டுக்கு போனும்! ‘கங்குவா’ பட தாமதமாவதற்கு ஜோதிகாதான் காரணமா?

ஆனாலும் இன்றும் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார் பிரபாஸ். அவரைக் காப்பாற்ற ஒரே படம் தான் இந்தக் கல்கி 2898 ஏடி. மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர் நடக்குது. அதுல பாண்டவர்கள் ஜெயிக்கிறாங்க.

அதுல முக்கியமான கேரக்டர் தான் அசுவத்தாமன். அப்போ பாண்டவர்களில் யாரும் இருக்கக்கூடாது என்று அஸ்வத்தாமன் ஒரு அஸ்திரத்தை ஏவி சிசுவைக் கொல்ல முயற்சிக்கிறான். அதைக் கிருஷ்ணன் ஒரு சிசுவையேக் கொல்லத் துணிகிறாயே. இது எந்த விதத்துல நியாயம்?

இதுல தர்மம் எங்கே இருக்குன்னு கேட்கிறார். அதனால அவரு கேட்டதைத் தாங்க முடியாம அசுவத்தாமன் என்னை உன் சக்கராயுதத்தால கொன்னுடுன்னு சொல்கிறான். இல்ல. கொன்னுட்டா அது விடுதலை. நீ இருந்து அனுபவிக்கணும். பல ஆண்டு காலம் நீ இதை அனுபவிக்கணும். கலிகாலத்துல நான் வருவேன்னு சொல்கிறார்.

குருஷேத்திரத்தில் இருந்து கலிகாலத்திற்குப் பயணிக்கிறது படம். இன்னும் கிட்டத்தட்ட 800 வருஷத்துக்குப் பிறகு கலிகாலம் ஆரம்பிக்கும்னு இயக்குனர் நாக் அஸ்வின் சொல்கிறார். மனித குலத்துக்கு எதிராக வன்முறைகள், கட்டுக்கடங்காமல் நடக்கும். அங்கு தான் கல்கி அவதாரம் எடுக்கிறார்.

Kalki

Kalki

இந்திய சினிமாவில் ராமாயணம், மகாபாரதத்தைத் தொடாமல் படம் எடுக்க முடியாது. ஆனால் படத்தில் ஹாலிவுட்டுக்கே சவால் விடுற மாதிரி காட்சிகள் இருக்கு. சிஜி ஒர்க் ரொம்ப பிரமாதமா இருக்கு. இந்தப் படத்தின் ஹீரோ அமிதாப்பச்சன் தான். படம் முழுவதும் 75 சதவீதம் அவரை வைத்துத் தான் படமே நகர்கிறது. நெற்றியில் லைட் எரியுற மாதிரி. அந்தத் தோற்றம்.

இதையும் படிங்க… கிளைமேக்ஸில் வெயிட்டான ட்விஸ்ட்!.. படத்துல பிரபாஸ் ஹீரோவா? அமிதாப் ஹீரோவா?.. கல்கி விமர்சனம் இதோ!..

சண்டைன்னு அதகளப்படுத்தி இருக்காரு அமிதாப்பச்சன். கமல் இந்த படத்திற்கு 13 நாள் தான் சூட்டிங் போயிருக்காரு. 180 கோடி சம்பளம் வாங்கிருக்காரு. சுப்பீரியர் கமல் தான். ஏலியன் மாதிரி வருகிறார். அவர் தான் அந்தத் திரவத்தை எடுக்க முயற்சிக்கிறார். எதுக்கு எடுக்கிறார் என்பதோடு படம் முடிகிறது. அதை அடுத்தப் பாகத்தில் பார்க்கலாம்.

மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

 

 

google news
Continue Reading

More in Cinema News

To Top