கனகா வசிக்கும் வீட்டில் என்னதான் நடக்கிறது?!.. உதவியாளர் சொன்ன அதிர்ச்சி செய்தி….

Published on: May 1, 2023
kanaga
---Advertisement---

தமிழ் சினிமாவில் சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தேவிகா. அவரின் மகள் கனகா கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படமே அதிரிபுதிரி ஹிட் ஆனதால் ரஜினிக்கெல்லாம் ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு முன்னேறினார். ஆனால், இவர் படப்பிடிப்பில் கூட யாரிடமும் பேசமாட்டார். மிகவும் தனிமை விரும்பி என அறியப்பட்டவர்.

periya veettu pannkaran karthick , kanaga

அம்மாவின் மறைவுக்கு பின் கனகா தொடர்ந்து சினிமாவில் நடிக்கவில்லை. அதோடு, 2007ம் ஆண்டு முத்துக்குமார் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமாகி 15 நாட்களில் முத்துக்குமார் கனகாவை பிரிந்து சென்றுவிட்டார். ஒருபக்கம், சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கணவர் பிரிந்து சென்றது, அம்மா இல்லாதது ஆகிய காரணங்களால் கனகா தனது வீட்டை விட்டே வெளியே வரமால் தனிமையில் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் பேசிய வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தனக்கு 50 வயது ஆகிவிட்டதாகவும், சினிமாவில் நடிக்க விரும்பினாலும் நடக்குமா என தெரியவில்லை எனவும் ஏதோதோ பேசியிருந்தார்.

அதேபோல், சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. கனகா பூஜையறையில் விளக்கு ஏற்றும்போது அது கீழே விழுந்து துணியில் பற்றி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சென்றபோது கூட கனகா அவர்களை வீட்டிற்குள் விடவில்லை. நீண்ட நேரம் கழித்து அவர்கள் உள்ளே சென்றனர். அப்போது ஒரே குப்பையாக வீடு அலங்கோலமாக இருந்துள்ளது. வீடு முழுவதும் பழைய துணிகள் மூட்டை கட்டி பல இடங்களில் வைக்கப்பட்டிருந்ததாம். அதையெல்லாம் தாண்டி சென்றுதான் தீயை அவர்கள் அணைத்துள்ளனர். எனவே, நடிகை கனகா வீட்டில் என்னதான் நடக்கிறது?.. அப்படி என்ன மர்மத்தை அவர் தொடர்ந்து வருகிறார் என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

கனகாவுக்கு தற்போது துணையாக இருப்பது அவரின் உதவியாளர் மட்டுமே. இதுபற்றி கருத்து தெரிவித்த அவர் ‘ நெருங்கிய உறவினர்களின் மோசமான நடவடிக்கையால்தான் கனகா இப்படி மாறிவிட்டார். அவர் என்ன கேட்டாலும் செய்து கொடுக்க நான் இருக்கிறேன். அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவரின் வாழ்க்கையை அவர் வாழ எந்த இடையூறும் செய்ய வேண்டாம்’ என அவர் கூறினார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.