நடிக்க வருவதற்கு முன் சூர்யா என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி...
நடிகர் சூர்யா சினிமாவில் தற்போது மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். ஆனால் அவர் முதலில் அவருக்கு நடிகராக எந்த விருப்பமும் இல்லையாம். அதனால் என்ன வேலை செய்தார் தெரியுமா?
வசந்த் இயக்கத்தில் வெளிவந்த நேருக்கு நேர் படத்தின் மூலம் நடிகர் சூர்யா சினிமாவிற்குள் வந்தது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால் அவருக்கு இது எதேச்சையாக நடந்த நிகழ்வு தானாம். சூர்யாவிற்கு சினிமாவில் நடிக்க எந்த வித ஆசையும் இல்லாததால் முன் தயாரிப்பு என எதிலுமே சூர்யா ஈடுபடவில்லை.
சிவகுமார் நடிப்பில் பிஸியாக இருந்த போது சூர்யா தன் தந்தை குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இருப்பதற்கு அவரின் இந்த பிஸி ஷூட்டிங்குகள் தான் காரணம் என்பதை அறிந்திருந்தாராம். அதனால் தான் நடிகராக கூடாது. துணி ஏற்றுமதி தொழில் செய்யலாம் என முடிவெடுத்து விட்டார்.
இந்த முடிவிலும் உறுதியாக இருந்தார். ஆசை படத்தில் முதலில் வசந்த் நாயகனாக கேட்டது சூர்யாவை தானாம். ஆனால் சூர்யா கதை கூட கேட்காமல் முடியவே முடியாது எனக் கூறிவிட்டாராம். கார்மெண்ட்ஸ் தொழில் தொடங்க நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருந்த ஒரு நிறுவனத்தில் தான் சிவகுமாரின் மகன் என்பதை கூறாமல் அப்ரண்டீசாக வேலை செய்து இருக்கிறார். அவரின் முதல் மாதம் சம்பளம் 1200 ரூபாய் தானாம்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வனாக ஜொலிச்சாலும் நாங்க அத மறக்கவே மாட்டோம்!.. ஜெயம் ரவிக்கு தொடரும் சிக்கல்!
சினிமாவில் வந்தால் கேரக்டர் சரியாக இருக்காது என சூர்யா நினைத்தாராம். அப்போ இதை கேட்ட இயக்குனர் வசந்த் நடிகனாக இருந்தால் மாற மாட்டாங்க. அவர்கள் குணாதிசியம் மாறாது என்பதற்கு உங்க அப்பா தான் உதாரணம். அவர் பையனா இருந்துட்டு நீ இப்படி சொல்லலாமா எனக் கேட்டு இருக்கிறார்.
அதை தொடர்ந்து சரி ஒரு படத்தில் நடிக்கலாம். அதன் வெற்றியை பொறுத்து எதிர்காலத்தினை மாற்றிக்கொள்ளலாம் என சூர்யா முடிவெடுத்தாராம். அதனை தொடர்ந்து தன் வேலை நிறுத்தி விட்டு படம் நடிக்க ஓகே சொன்னாராம். முதன்முதலில் அவரை நடிக்க வைக்க ஆசைப்பட்ட மணிரத்னம் மற்றும் வசந்த் கூட்டணியில் தான் சூர்யா அறிமுகம் செய்யப்பட்டார். முதல் படம் விஜயுடன் நடித்திருந்தார்.
படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் சூர்யாவை இனி நடனம் மட்டும் ஆட வேண்டாம் என பல பத்திரிக்கைகள் வேண்டிக்கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்தாலும் நந்தா படத்திற்கு பின்னரே சூர்யாவால் கோலிவுட்டில் இடம் பிடிக்கப்பட்டது.