More
Categories: Cinema News latest news

கமல்ஹாசனின் அடுத்த 2 மாத பிளான் இதானாம்.. இனிமே அதிரடி சரவெடி தான்…

Kamalhassan: கமல்ஹாசன் நடிப்பில் தொடர்ச்சியாக படங்கள் உருவாகி வரும் நிலையில், அவருடைய அடுத்த இரண்டு மாத பிளான் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவுக்கு நிறைய புதிய டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தியது என்னவோ கமல்ஹாசன் தான். ஆனால் பல வருடங்களாக அவரின் கேரியர் மிகப்பெரிய தொய்வை சந்தித்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த விக்ரம் திரைப்படம் மீண்டும் அவரை பழைய உலக நாயனாக உருவெடுக்க வைத்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: கவின் படத்தில் லேடி சூப்பர்ஸ்டாரா? அதுவும் படக்குழுவே முரட்டுத்தனமே இருக்கே!

அப்படத்தில் வெற்றியை தொடங்கு தொடர்ச்சியாக நிறைய படங்களை ஒப்புக்கொண்டு அதில் பரபரப்பாக நடித்து வருகிறார். சங்கர் இயக்கத்தில் இந்தியன் இரண்டாம் பாகம், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப், அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் கல்கி 2898ஏடி படத்தில் முக்கிய வேடம் என பரபரப்பாக இயங்கி வருகிறார். இப்படங்களில் முதற்கட்டமாக இந்தியன் 2 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இப்படத்தின் முதல் சிங்கள் இன்று வெளியாக இருக்கும் நிலையில் கமலின் அடுத்த இரண்டு மாத பிளான்கள் குறித்தும் இணையத்தில் முக்கிய தகவல்கள் கசிந்து இருக்கிறது.

அதன்படி பார்க்கும்போது, இன்று வெளியாகும் முதல் சிங்கிளைத் தொடர்ந்து, ஜூன் ஒன்றாம் தேதி இந்தியன் இரண்டாம் பாகத்தின் ஆடியோ  ரிலீஸ் நிகழ்ச்சி விமர்சையாக நடத்தப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: கவர்னரிடமே கெத்து காட்டிய கமலின் அப்பா!.. விதையே அவர் போட்டதுதான்!.. செம மேட்டரு!..

அடுத்ததாக ஜூன் இரண்டாம் வாரத்தில் கல்கி ஏடி 2898 திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து ஜூன் மூன்றாம் வாரத்தில் கல்கி படத்தின் ப்ரோமோஷன், பிரத்தியேக பேட்டிகள் என இருக்கும் எனவும் தகவுகள் தெரிவிக்கிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 24 ஆம் தேதி கல்கி ஏடி 28 98 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அடுத்த ஜூலை 1ஆம் வாரத்தில் இந்தியன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும்.

அப்படத்தின் ப்ரோமோஷன், பேட்டிகளிலும் கமல் கலந்து கொள்ள இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி இந்தியன் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகும். இதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கமல் எப்போதும் லைம் லைட்டிலே இருப்பார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Published by
Akhilan

Recent Posts