Cinema History
ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் என்னதான் பிரச்சனை? வீராவுக்குப் பிறகு இசை அமைக்கவே இல்லையே..!
அன்னக்கிளி படத்துக்குப் பிறகு இளையராஜா இசை அமைத்தாலே அது வெற்றிப்படம் தான் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையா இருந்தது. முன்னணி நடிகர், நிறுவனங்கள் இளையராஜாவுக்காக எவ்வளவு நாளானாலும் காத்திருப்பாங்களாம். ராஜாசின்ன ரோஜா, மனிதன்னு ஒண்ணு ரெண்டு படங்கள் தவிர பெரும்பாலான ரஜினி படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா தான்.
வீரா
வீரா படம் வரைக்கும் இளையராஜா இசை அமைத்தார். பாட்ஷாவுக்கு தேவா இசை அமைத்தார். அதுக்கு அப்புறம் அவர் ரஜினிக்கு இசை அமைக்கல. இந்த வாய்ப்பு முதல்ல இளையராஜாவுக்குத் தான் போனதாம். பாட்ஷா படம் ரஜினியை உச்சத்துல கொண்டு போய் வைத்த படம்.
பரபரப்பு குறைஞ்ச நேரம்
Also read: சூர்யாவை ஓகே பண்ணுறதுக்கு முன்னாடி இவருக்கு கதை சொன்னேன்.. ஆர்.ஜே.பாலாஜியின் திடீர் ட்விஸ்ட்..
சத்யா மூவீஸ் படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்குனர். அப்போ இளையராஜாவோட பரபரப்புக் கொஞ்சம் குறைஞ்சிக்கிட்டு இருந்த நேரம். புதுப்புது இசை அமைப்பாளர்கள் வர்றாங்க. கலைஞர்கள் அவங்களுக்கான சம்பளத்தை வச்சிருப்பாங்க. அப்போ பாரம்பரிய இருக்கக்கூடிய இசை நிறுவனங்கள் கொஞ்சம் சம்பளத்தைக் குறைச்சித்தான் கொடுப்பாங்களாம். விருப்பப்பட்டா ஒத்துக்கலாம். இல்லன்னா எனக்கு இந்த சம்பளம் வேணும்னு சொல்லி வாங்கறது உண்டு. இதுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல என்கிறார் கங்கை அமரன்.
ரஜினியே கேட்கிறார்
இளையராஜா சம்பளத்தைக் காரணத்தைச் சொல்லிக்கூட மறுத்திருக்கலாம். ஆர்.எம்.வீரப்பனே நேரடியா போய் பார்க்கிறார். மறுத்துவிட்டார். ரஜினியே இளையராஜா தான்னு உறுதியா இருக்கிறார். உடனே ‘சாமிக்கிட்ட நான் பேசுறேன்’னு இளையராஜாவிடம் போகிறார். அவர் ‘நீங்க தான் இந்தப் படத்துக்கு இசை அமைக்கணும்’னு கேட்கிறார்.
அதற்கு இளையராஜா ‘நீங்க இதுவரைக்கும் எந்தக் கம்பெனிக்கும் தலையிடல. இந்தக் கம்பெனிக்கு மட்டும் ஏன் தலையிடறீங்க. கம்பெனியே வந்து பேசட்டும். அப்போ தான் சரியா இருக்கும். கோவிச்சுக்காதீங்க’ன்னு இளையராஜா சொன்னதும் ரஜினி மௌனமாக கிளம்பி விடுகிறார்.
பாட்ஷா
அப்புறம் பாட்ஷாவுக்கு தேவா இசை அமைக்கிறார். பாடல்கள் எல்லாம் சிறப்பா இருந்தது. அதன்பிறகு ரஜினி படங்களுக்கு இசை அமைக்கவே இல்லை. அதன்பிறகு கங்கை அமரனும் ரஜினியும் சந்திக்கிறாங்க. ‘நீங்க ஏன் சாமி நீங்க அண்ணன் கூட சேர்ந்து பண்றதுல்ல’ன்னு கேட்கிறார். அதற்கு ரஜினி மழுப்பலாகப் பதில் சொல்கிறார். இல்ல.
Also read: கையில் வீச்சருவாவுடன் ரத்தம் தெறிக்க மிரட்டலான லுக்கில் நயன்தாரா!… டீசர் வீடியோ இதோ!..
‘இப்ப வர்றவங்க எல்லாம் புதுப்புது இயக்குனர்கள். அவங்க அண்ணன்கிட்ட வந்து பேசத் தயங்குறாங்க. அதனால தான் அவங்க போக்குலயே விட்டுறேன்’ என்றார். அதே நேரம் ‘ரெண்டு பேரும் இன்று வரை பிரியாத நண்பர்கள் தான்’ என்கிறார் கங்கை அமரன். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.