Connect with us
Kamal3

Cinema History

கமலுக்கு உலகநாயகன் பேரு வந்ததே அதுக்குத்தானாம்..! ஆராய்ச்சியின் முடிவில் சொன்ன பிரபலம்!

கமல் தற்போது அஜீத் போல பட்டத்தை உதறித் தள்ளிவிட்டார் என்பது பேசுபொருளாக வலைதளங்களில் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் கமல் தனது ரசிகர் மன்றத்தை முதன்முதலாக நற்பணி மன்றமாக மாற்றியவரே கமல் தான்.

Also read: உலகநாயகனுக்கே சோதனையா…? ஏர்போர்ட்ல நாலு மணி நேரமாக கமலுக்குத் தொல்லை…!

கமல் சினிமாவுக்காக எத்தனையோ பரீட்சார்த்தமான முயற்சிகள் செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு சாதனம் சினிமா சம்பந்தமாக கண்டுபிடிக்கப்பட்டால் அதைத் தமிழுக்குக் கொண்டு வந்து கௌரவப்படுத்துவார்.

ஏஐ டெக்னாலஜி

சினிமா மட்டும் அல்லாமல் எந்தத் துறைப் பற்றிப் பேசினாலும் சளைக்காமல் விளக்கம் கொடுப்பார். தற்போது வரை தன்னை ஒரு மாணவனாக நினைத்துக் கொண்டு தினமும் புதுப்புது விஷயங்களைக் கற்று வருகிறார். இப்போது கூட அமெரிக்காவில் ஏஐ டெக்னாலஜியைப் படிக்கச் சென்றுள்ளார்.

யூகிசேது

Also read: மகாநதி படத்தைப் பார்த்துட்டு தயாரிப்பாளர் செய்த ரகளை…! கமல் வீட்டுக்கே போயிட்டாரே..!

இப்படி பல விஷயங்களை அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இப்போது உலகநாயகன் என்ற பட்டம் அவருக்குக் கொடுத்தது ஏன்? இது பொருந்துமா அல்லது ஓவரா என்பது பற்றிப் பார்ப்போம். இதுகுறித்து பிரபல நடிகர் யூகிசேது ஒருமுறை இப்படித் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கட்டுரை

thuglife yoogi sethu

thuglife yoogi sethu

கமலைப் பற்றி இந்தியாடுடே பத்திரிகையில் 6 பக்கம் ஆய்வுக்கட்டுரை எழுதி இருக்கிறேன். இதை பெருமையாகக் கருதுகிறேன். அதில் இருந்து ஓரிரு முக்கியமான விஷயங்களைச் சொல்கிறேன்.

ஒரே நபர் கமல்

உலகநாயகன் என்று அவருக்கு ஏன் பெயர் வந்தது என்றால் பல உலக சாதனைகளைத் தன்னுள் அடக்கி வைத்து இருக்கிறார். 5 வயதில் ஆரம்பித்து 50ஐத் தாண்டி உலக மனித வரலாற்றில் இன்றும் நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரே நபர் கமல் மட்டும் தான். 9ம் வகுப்பில் பள்ளியை விட்டுட்டு டாக்டர் பட்டம் வாங்கிய ஒரே நடிகர் கமல் தான்.

Also read: Biggboss Tamil: உன் கேரக்டரை பண்ண துப்பு இல்லை… சவுண்ட் சரோஜாவாக மாறிய சவுந்தர்யா… ஆட்டம் பத்திக்கிச்சு…

5 மொழிகள் நடித்து 5 மொழிகளிலும் சில்வர் ஜூப்ளி கொடுத்த ஒரே நடிகர் கமல். ஆய கலைகள் 64ம் தெரிந்த மகா கலைஞன் கலைஞானி கமல் மட்டும் தான். இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம் என்கிறார் யூகிசேது. இது பிரபல தொலைக்காட்சியில் கமல் நடுவராக இருந்து நடத்திய பட்டிமன்றத்தில் பேசியது. 2000த்தில் கேஎஸ்.ரவிகுமார் தெனாலி படத்துக்கு உலகநாயகன் என்ற பட்டத்தைக் கமலுக்கு கொடுத்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top