டிரிக்கர்ல ஆக்ஷனையும் தாண்டி இருக்குற டச்சிங்கான விஷயம் இதுதான்....சொல்கிறார் அதர்வா!

முரளியின் வாரிசு நடிகர் அதர்வா பல படங்களில் ஆக்ஷனாக நடித்துள்ளார்;. பாணா காத்தாடியில் அறிமுகமான இவர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பில் முத்திரை பதித்து வருகிறார்.

தற்போது இவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் டிரிக்கர் ஒரு அட்டகாசமான ஆக்ஷன் படமாக வந்துள்ளது. இதுபற்றி அவர் என்ன சொல்கிறார் என்றும் அவரது அப்பாவுடன் நடந்த இன்ட்ரஸ்டிங்கான விஷயம் பற்றியும் சொல்வதைப் பார்ப்போம்.

எக்சாம்ல நான் ரொம்ப படிக்க மாட்டேன். எய்த்தோ நைன்த்தோ படிக்கும்போது எக்சாம் நடந்தது. நான் போனேன். போயிட்டு அட்டண்ட் பண்ணுனேன். அந்த டைம்ல வேற என்னமோ டோர்னமெண்ட். எக்சாம் வந்து ஹால்ப் அன் அவர் லிமிட்.

trigger3

அதுக்குள்ள எழுதிட்டு கிளம்பிடணும். சோ அந்த டைம்ல ரிசல்ட் வந்துடுச்சி. அல்மோஸ்ட் எல்லா சப்ஜெக்ட்லயும் அவுட். இப்போ எங்க அப்பாக்கிட்ட போயிட்டு ரிப்போர்ட் கார்டு எடுத்துட்டுப் போயி கொடுத்தா என்ன பண்ணுவாருன்னு சொல்லிட்டு அவரோட சிக்னேச்சர நான் போட்டுட்டேன்.

சோ இதைக் கண்டுபிடிக்க மாட்டாங்கன்னு நினைச்சா அங்க இருக்குற டீச்சர் எங்க அம்மாவுக்கு பிரண்ட். அவங்க எங்க அம்மாகிட்ட போட்டுக் கொடுத்தாங்க. எங்க அம்மா அப்பாக்கிட்ட போட்டுக் கொடுத்தாங்க. எனக்குத் தெரியாது அப்பாக்கு இந்த விஷயம் தெரியும்னு.

டின்னர்ல நான் ரொம்ப ஜாலியா வீட்ல சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். ஒரு ஸ்ட்ரஸ்சும் பக்கத்துல இருக்குற சாம்பார் கரண்டி பறந்து எங்கிட்ட வந்தது. அப்ப அடி வாங்குனேன். அதுக்கு அப்புறம் அங்க பேச்சுக்கு இடமே இல்ல.

Atharva3

புல்லா ஆக்ஷன் சீன் தான். எங்க அப்பா வந்து ரொம்ப ஸ்ட்ரிக்ட். எப்ப நான் ட்வெல்த் படிச்சேனோ அதுக்கு அப்புறம் அப்படியே மாறிட்டாரு. எப்படி மாறினார்னு எனக்கே தெரில. ஒரு பிரண்ட் மாதிரி மாறிட்டாரு.

பொhண்ணுங்கக்கிட்ட இப்ப எல்லாம் பிக்அப் லைனே கிடையாதுங்க. அது யாருக்குமே பிடிக்க மாட்டேங்கு உங்களுக்கு மனசுல என்ன தோணுதோ அப்படியே உடைச்சிடலாம். முதல்ல ஒரு பொண்ணப் பார்க்குறேன்னா அவங்களோட பர்சனாலிட்டியைப் பார்ப்பேன். அவங்க பேசுற விதம், யோசிக்கிற விதம், இருக்குற சூழல எப்படி கையாளுவாங்கன்னு பார்ப்பேன்.

டிரிக்கர் இயக்குனர் சாம் ஆண்டர்சன் கூறுகையில்,

நான் யாருக்கிட்டயும் அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணல. எஸ்ஆர்எம்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன். அதுக்கு அப்புறம் தான் இதை ஆரம்பிச்சேன். முதல்ல டெலிவிஷன்ல தான் இருந்தேன். நாலரை வருஷம் இருந்தேன். ரொம்ப ஒரு வெறில எல்லாம் சினிமாவுக்கு வரல.

ஷங்கர் சார்க்கிட்ட தான் ஒர்க் பண்ண புடிக்கும். டிரிக்கர் வந்து ஒரு ஆக்ஷன் படம். அப்பா மகனோட வலி. ஏன்னா நாம இப்போ நிறைய படம் பார்த்துருப்போம். அப்பா ஸ்ட்ரிக்டா இருப்பாரு. பையன் வந்து ஜாலியா இருப்பான். கடைசியில பையன் ஜெயிப்பாரு. இதுல ஒரு அப்பாவ ஜெயிக்க வைக்கணும்னு ஒரு பையன் நினைக்கிறதுதான் படத்தோட கதை.

அதர்வா இந்தப்படத்தைப் பற்றி கூறும்போது, டிரிக்கர்ல என் கேரக்டர் பிரபா. மக்களிடம் லஞ்சம் வாங்காம பார்த்துக்கறதுக்கு போலீஸ் இருக்காங்க. சோ இந்த போலீஸ வாட்ச் பண்றதுக்கு ஒரு டீம் இருக்காங்க. இன்டர்னல் அஃபயர்ஸ்னு ஒரு டீம். அந்த டீம்ல ஒர்க் பண்றவன் தான் பிரபா.

trigger

அதைச் சுற்றி சின்ன ஒரு பிரச்சனை வரும். அது எப்படி மாறுதுங்கறது தான் படம். அதையும் தாண்டி இந்தப்படத்துல வந்து ஒரு அப்பா பையனுக்குள்ள உறவு பத்தி சொல்லிருக்காங்க.

அருண்பாண்டியன் சார் அப்பாவா நடிச்சிருக்காரு. அவரு முடிக்காத ஒரு கேஸ எப்படி ஒரு பையன் வந்து முடிக்கிறான் என்கிறது தான் படத்தோட கதை. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான கதை.

அருண்பாண்டியன் சார் ரொம்ப சீரியஸா இருப்பாரு. அவர் சிரிக்கறதே கம்மி. நான் முதல்ல அவர்க்கிட்ட கொஞ்சமா தான் பேசினேன். ஐ எம் அதர்வான்னுளு சொல்லி என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். ரெண்டு மூணு நாள் கழிச்சி அவரும் ஜாலியாயிட்டாரு.

Related Articles
Next Story
Share it