நடிகர், குணச்சித்திரம், வில்லன் என பன்முகத்திறன் கொண்டவர் ராதாரவி. இவர் ராமராஜனுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஒரு பட விழாவில், ராமராஜன் குறித்து ராதாரவி இப்படி பேசியுள்ளார்.
இங்கு உலகநாயகன் கமலுக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் போட்டியாக வந்தவர் ராமராஜன்னு சொன்னாங்க. ஆனா அவரு போட்டியே கிடையாது. அவரு யாருக்குமே போட்டியே கிடையாது. ரொம்ப அமைதியான மனிதர். அது வந்து படம் ஓடுது. அதுக்கு என்ன செய்ய முடியும்? படம்னா குடும்பப்பாங்கான படம். அவரைப் பார்த்து கெட்டுப் போனவங்க நிறைய பேரு இருக்காங்க.
இதையும் படிங்க… ஒரே இசைக்கருவியை வைத்து இளையராஜா பாடிய பாடல்… வைரமுத்துவுக்கு இதெல்லாம் தேவையா இப்படி பாடிட்டாரே…?
‘மாடு உதைக்கும்போது பாட்டுப் பாடினா பால் கறக்கும்’னு நினைச்சாங்க. அவரு செஞ்சாருன்னா அது வேறு. நீ ஏன் செய்ற பார்த்துன் ரசிகர்களைப் பார்த்து கேட்டு ராமராஜனையே அசர வைத்து விட்டார் ராதாரவி.
ராமராஜனை எனக்கு அப்பவே தெரியும். குன்னூர்ல பேய்வீடு எடுத்துக்கிட்டு இருக்கும்போது அவரு ராமநாராயணன்கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரு. அவரு 2 பூவை வச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு போட்டா எடுத்துக்கிட்டு இருந்தாரு. நான் அப்பவே சொன்னேன். நீ ஹீரோவா ஆகப்போறடான்னு. ஏன்னா அந்த கண்ணுல ஒளி தெரியுது.
எனக்கும் ராமராஜனுக்கும் ஒரே ஒற்றுமை என்னன்னா அவரும் ‘ஆர்ஆர்'(RR). நானும் ‘ஆர்ஆர்'(RR). அவரு ராமராஜன். நான் ராதாரவி. அவ்வளவு தான் வித்தியாசம். நாங்க ரெண்டு பேரும் நிறைய படங்கள் பண்ணிருக்கோம். அவரோட ஆரம்ப காலத்துல எல்லாம் அண்ணன், வில்லன்னு அவரோடு சேர்ந்து நடிச்சிருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… இதுதான் சமயம்!.. ஸ்ருதிஹாசனை மேடையில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்!.. கதறவிட்ட தாத்தா!..
ராசாவே உன்னை நம்பி, பொங்கி வரும் காவேரி, என்னை விட்டு போகாதே மற்றும் சாமானியன் ஆகிய படங்களில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சாமானியன் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. ராமராஜனைப் பொருத்தவரை ராதாரவி குறிப்பிட்டது போல அவர் அமைதியான மனிதர் தான். அவரது படங்களில் கூட எம்ஜிஆர் பாணியில் நிறைய காட்சிகள் வருவதுண்டு. அவரும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…