அந்தக் காலங்களில் கொட்டகை தியேட்டர்களை டூரிங் டாக்கீஸ்னு சொல்வாங்க. அங்கே பெரிய திரை இருக்கும். பழைய படங்கள் ஓடும். 80, 90கள் வரை நாம் கண்டு ரசித்த தியேட்டர்கள் என்றால் அது டூரிங் டாக்கீஸ் தான். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களை இங்கு இருந்து கைதட்டி, ரசித்துப் பார்க்கும்போது இருக்கும் சுகமே அலாதியானது.
பகல் முழுக்க வெயிலில் கிடந்து கஷ்டப்பட்டு உழைத்த விவசாய வர்க்கத்தினர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு இங்கு வந்து மணல் கூட்டி அதன் மேல் அமர்ந்து படம் பார்ப்பது தான் உடல் களைப்பையும், மன உளைச்சலையும் போக்கும் அருமையான இடம். இங்கு படம் ஓடும்போது சிலைடு போடுவார்கள். அதுதான் விளம்பரம். அருகில் உள்ள பெரிய பெரிய கடைகளுக்கு நல்லா விற்பனை வரவேண்டும் என்றால் இந்தத் தியேட்டரில் தான் இடைவேளையின் போது சிலைடு போடுவார்கள்.
அதெல்லாம் சரி. இந்த டூரிங் டாக்கீஸ்க்கு எப்படி இந்தப் பெயர் வந்ததுன்னு தெரியுமா? ஆரம்ப காலகட்டத்தில் சினிமா பேசாத வெறும் ஊமைப்படங்களாகத் தான் வந்தன. அதன்பிறகு பின்னணி இசையுடன் சேர்ந்து வந்தது. சார்லி சாப்ளின் படங்கள் இப்படித் தான் வந்தன. காலப்போக்கில் சினிமாவில் வசனங்களுடன் பேசும்படங்களாக வர ஆரம்பித்தன. அந்தக் காலத்து மக்கள் இதைப் பார்க்கும்போது சினிமாவில் உள்ளவர்கள் நம்ம கிட்ட பேசுறாங்கன்னு ஆச்சரியப்பட்டாங்க. அதனால் தான் டாக்கீஸ்னு சொன்னாங்க.
இதை ஊர் ஊராகச் சென்று எல்லோருக்கும் காட்ட வேண்டுமே என்ற எண்ணத்தில் அந்த பெரிய திரையையும், கூடாரத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டு ஊர் ஊராக டூர் சென்று அங்கு போய் மக்கள் மத்தியில் டெண்ட் போட்டு படத்தைக் காட்டினார்களாம். இதுவே டூரிங் டாக்கீஸாக காலப்போக்கில் மாறிவிட்டது. டிவி வராத காலகட்டங்களில் எல்லாம் இந்தத் தியேட்டர்களுக்குத் தான் மவுசு அதிகம்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…