அஜித்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இதுதான்!.. ஓப்பனா சொல்லிட்டாரே விஜய்!…

Published On: April 14, 2025
| Posted By : சிவா

Vijay Ajith: நடிகர் விஜயும் அஜித்தும் ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள். இருவருமே காதல் படங்களில் நடிக்க துவங்கி பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி ஒரு கட்டத்தில் இருவரும் மாஸ் ஹீரோவாகவும் மாறிவிட்டார்கள். இவருக்குமே ரசிகர் கூட்டம் அதிகம். திரையுலகில் எம்.ஜி.ஆர், – சிவாஜி, ரஜினி – கமல் ஆகியோருக்கு பின் விஜய் – அஜித் என்கிற போட்டி உருவானது.

ரஜினி – கமல் ரசிகர்களை போலவே விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டை போட துவங்கினார்கள். அதுவும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் வந்தபின் அந்த சண்டை அதிகமானது. அஜித் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போடும் களமாகவே டிவிட்டர் மாறி நாறிப்போனது. இருவரின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் திட்டி ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்து அசிங்கமாக நடந்து வருவது தொடர்கதையாகி விட்டது.

இது பற்றி விஜய் எப்போதும் தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொன்னதே இல்லை. சண்டை போட்டுக்கொள்ளட்டும் என நினைக்கும் மனநிலையிலேயே அவர் இருப்பதாக தெரிகிறது. அஜித் மட்டுமே ‘ஒருவரை புகழ்வதற்காக ஒருவரை திட்டாதீர்கள்’ என சொன்னார். மேலும், ‘விஜய் வாழ்க.. அஜித் வாழ்க.. நீங்க எப்போ வாழ்ப்போறீங்க?’ எனக்கேட்டார். ஆனாலும், அவரின் ரசிகர்கள் திருந்தவில்லை.

vijay

20 வருடங்களுக்கு முன்பு அஜித்தும் விஜயும் தங்களின் படங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்களையும், பாடல் வரிகளையும் கூட வைத்தனர். ‘இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன’ என தனது படத்தில் பாடல் வரிகளை பாடினார் அஜித். திருமலை படத்தில் ‘யாருடா உங்க தல?’ என கோபமாக வசனம் பேசுவார் விஜய்.

ஆனால், காலம் அவர்கள் இருவரையும் மாற்றியது. காலம் செல்ல செல்ல இருவருக்கும் பக்குவம் கூடியது. அப்படி சண்டை போடுவதை விட்டுவிட்டார்கள். ஒரு விழாவில் கோட் போட்டு வந்த விஜய் ’நண்பர் அஜித் மாதிரி’ என சொல்லி சிரித்தார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.

இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பே விஜயிடம் ‘உங்களுக்கு அஜித்திடம் பிடித்த விஷயம் என்ன?’ என்கிற கேள்விக்கு மிகவும் யோசித்து அவர் சொன்ன பதில் ‘தன்னம்பிக்கை’. அதேபோல் ‘அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்து எல்லாம் மிகப்பெரிய விஷயம்’ என விஜய் பாராட்டி பேசியிருந்தார்.