சொந்த அறிவே இல்லையா?!.. இளையராஜா வழக்கு போட்டதுல என்ன தப்பு? அனிருத்தை விளாசிய பிரபலம்..

சமீபத்தில் இளையராஜா, ரஜினி நடித்து வரும் கூலி படத்தில் தன் பாடலை பயன்படுத்தியதற்காக சன்பிக்சர்ஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளாராம். அதற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

தலைவர் 171 என்ற பெயரில் ரஜினி படத்தை லோகேஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்புக்கான டீசர் வெளியானது. கூலி என்ற பெயருடன் வெளியானது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். டீசரில் தான் அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என எம்எஸ்.வி.யின் பாடல் வரிகளைப் பஞ்ச் டயலாக்காக பயன்படுத்தி இருந்தார்.

இதையும் படிங்க... தனுஷின் கண்களைப் பார்த்ததும் நடிக்க முடியாமல் திணறிய நடிகர்… அப்படி என்னதான் நடந்தது?

அதன்பிறகு தங்கமகன் படத்தில் 'வாவா பக்கம் வா' என்ற படத்தில் வரும் பாடலைப் பயன்படுத்தியிருக்கிறார். அனிருத் ஏற்கனவே வெளியில் உள்ள ஆல்பங்களை எடுத்து தன்னோட படத்தில் போட்டுள்ளார். அது காபி ரைட் விவகாரமாயிற்று. காப்பி அடிக்கிறது தெரிஞ்சிப் போச்சு. எதுக்கு வெளியில போயி அடிச்சிக்கிட்டு, லோக்கல்லயே அடிப்போம்னு இங்கேயே அடிச்சிருக்காரு. அது இளையராஜா வழக்கு தொடர்ந்துருக்காரு.

உண்மையிலேயே அனிருத்துக்கு இசை அமைக்க தெரியுமா? கீ போர்டாவது வாசிக்கத் தெரியுமா? சரிகமபதநி சுரங்களாவது தெரியுமா? இதெல்லாம் தெரியாமலா இசை அமைக்க வந்திருப்பாங்கன்னு கேட்கலாம். அப்படி தெரிஞ்சா ஏன் காப்பி அடிக்கணும்? இளையராஜா 40 வருஷத்துக்கு முன்னாடி போட்ட டியூன் இன்னும் பிரஷா இருக்கு.

Koolie

Koolie

அப்படி இருக்கும்போது இதை அனிருத் காப்பி அடிச்சி போட்டாருன்னா இப்ப உள்ள தலைமுறை இவரு இசை அமைச்சதா தானே நினைக்கும். அந்த வகையில் இளையராஜா வழக்கு தொடர்ந்ததுல என்ன தப்பு? முடிஞ்சா சொந்தமா இசை அமைங்க. நந்தி மாதிரி குறுக்கே நிக்காதீங்க. வேற நல்ல இசை அமைப்பாளர் யாராவது அந்த இடத்திற்கு வருவாங்க என்கிறார் பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.

தங்கமகன் படத்தில் வா வா பக்கம் வா என்ற இளையராஜாவின் பாடலில் டி ஐ டிஸ்கோன்னு ஒரு வரி வரும். அதை கூலி டைட்டில் டீசரில் அனிருத் எடுத்துப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story