தாய் இறந்த துக்கம்!.. கூட்டத்தில் கமல் செய்த காரியம் என்ன தெரியுமா?..

by Rohini |
kamal
X

kamal

தமிழ் சினிமாவில் உலகநாயகனாக இன்று வலம் வரும் கமலை சினிமாவிற்கு அழைத்து வந்தவர்களில் முக்கியமானவர் அவருடைய குடும்ப மருத்துவர் ஒருவர். கமல் துருதுரு என்று இருப்பதை பார்த்த அந்த மருத்துவர் அவரை ஏவி.மெய்யப்பச்செட்டியாரிடம் அழைத்து வந்தார்.

அவரும் கமலின் குணாதிசயங்களை பார்த்து தான் தயாரித்த களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை பெற்றார் கமல். அது முதல் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே ஜொலித்தார்.

kamal1

kamal1

பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வானம்பாடி, ஆனந்த ஜோதி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி ஆகியோருடன் நடித்திருக்கிறார். இப்படி நடித்து வந்த கமலை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்திய பெருமை பாலசந்தரையே சேரும். அரங்கேற்றம் படத்தில் கமலை ஒரு முழு நடிகனாக நடிக்க வைத்தார்.

அந்த படம் கமலுக்கு ஒரு புதிய திருப்பு முனையாக அமைந்தது. மேலும் நடிப்பை பற்றி அவ்வை டி. சண்முகத்திடம் தான் கற்றார் கமல். நடிப்பில் நுணுக்கம், கலை என எல்லாவற்றையும் அவரிடம் தான் கற்றார். இப்படி நடிப்பின் மீது அலாதி பிரியம் கொண்ட கமல் சற்று தொலை நோக்குப் பார்வையும் கொண்டவர்.

ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாதவர், சாதி, மதம் என எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் என்ற புத்தக விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் சாதிக்கு எதிர்ப்பாக சில விஷயங்களை பேசியிருந்தார். அது மிகவும் வைரலானது.

kamal2

kamal2

இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக ஒரு விஷயத்தை வலைப்பேச்சு அந்தனன் கூறினார். பிராமணர் சமூகத்தில் பிறந்தவர் தான் கமல். அவரது தாயான ராஜலட்சுமி இறக்கும் போது அவரை சேர்ந்த சமூகத்தினர் மட்டும் தூக்கிக் கொண்டு சென்றிருக்கின்றனர். அப்போது அருகில் கமலின் நண்பர் ஒருவர் நின்று கொண்டிருந்தாராம்.

சரி நாமும் ஒரு கை பிடிப்போம் என்று அந்த நண்பரும் தூக்க முற்பட்டிருக்கிறார். உடனே அவர்கள் அந்த நண்பரை தள்ளி விட்டனராம். இதை பார்த்துக் கொண்டிருந்த கமல் துக்கிக் கொண்டு சென்றவர்கள் பக்கத்தில் நெருங்க அவர்களிடம் இருந்து சாராய நெடி வந்திருக்கிறது.

இதையும் படிங்க : எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர்!.. தொடர்ந்திருந்தால் என்னவாயிருக்கும்?.. கப்சிப்பான திரையுலகம்!..

இதைக் கவனித்த கமல் ‘யோவ் நீ சாராயத்தை சாப்பிட்டு என் அம்மாவை தூக்குற, ஆனால் நீ தள்ளி விட்டவன் ஒரு முட்டை கூட சாப்பிடமாட்டான், சுத்த சைவம் , அவன போய் நீ தள்ளி விடுற’ என்று சொல்லிவிட்டு அந்த நண்பரை தூக்க சொல்லியிருக்கிறார் கமல். இப்படி சாதி , சமூகம் பார்க்காமல் இன்று வரை அதை கடைப்பிடித்துக் கொண்டு வருகிறார் கமல், இந்த சுவாரஸ்ய தகவலை வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.

Next Story