Cinema History
இதுதான் கடைசி வார்னிங்!. ரஜினி பட போஸ்டர்களை கிழிக்க வைத்த எம்.ஜி.ஆர்…
தமிழ் சினிமாவில் தற்சமயம் வரை டாப் நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் போன வருடம் வெளியான அண்ணாத்த திரைப்படம் அந்தளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
ஆனால் ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கவிருக்கும் இரு திரைப்படங்களுக்குமே மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்தப்போது அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பெரும் சண்டை இருந்து வந்தது.
சினிமாவில் எம்.ஜி.ஆர் தொட்ட உச்சத்தை சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே தொட்டு விட்டார் ரஜினிகாந்த். 1982 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ரங்கா. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போது ரஜினிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை ஜெயலலிதா நடிக்க இருந்தார்.
எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை:
ஆனால் எம்.ஜி.ஆருக்கு ரஜினிகாந்தை பிடிக்காது என்பதால் அந்த படத்தில் ஜெயலலிதாவை நடிக்க விடவில்லை. இதனையடுத்து அந்த படத்தில் ஜெயலலிதாவிற்கு பதிலாக நடிகை கே.ஆர் விஜயா நடித்தார். அந்த படம் வெளியான பிறகு ஒரு நிகழ்ச்சிக்காக காரில் சென்றார் எம்.ஜி.ஆர். அப்போது போகும் வழி எங்கும் பெரிய பெரிய பேனர்களில் ரஜினிகாந்தின் படம் இருந்துள்ளது.
அதில் ரஜினிகாந்த் சட்டை இல்லாமல் நின்றுக்கொண்டு சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருந்தது. அதை பார்த்த எம்.ஜி.ஆர் அந்த விழாவிற்கு சென்று ரங்கா பட போஸ்டரை விமர்சிக்க துவங்கினார். “நான் வரும் வழியில் பிரபல நடிகர் ஒருவர் சிகரெட்டோடு போஸ் கொடுக்கும் போஸ்டர்களை பார்த்தேன்.
இதன் மூலம் இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்கிறீர்கள் என கோபப்பட்ட எம்.ஜி.ஆர் இனி எந்த நடிகரும் இப்படி போஸ்டர் வைக்க கூடாது என எச்சரித்தார்”.
இதை எம்.ஜி.ஆர் சொன்ன உடனேயே ஏற்கனவே இருக்கும் ரஜினி போஸ்டர்களை கிழித்தெரிந்தனர் ரங்கா படக்குழுவினர். இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.
இதையும் படிங்க: ரஜினியே வந்தாலும் அதான் நிலைமை போல.. விக்னேஷ் சிவன் சொன்ன பதில பாருங்க…