Connect with us

Cinema History

என்னை ஏமாத்தி அவன் ஜாலியா இருந்தான் : அண்ணனுக்கே சம்பவம் செய்த ப்ரேம்ஜி!..

இயக்குனர் பேரரசுவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து பிறகு இயக்குனரானவர் வெங்கட்பிரபு. வெங்கட்பிரபு இயக்குனர் கங்கை அமரனின் மகன் ஆவார்.

2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் வெங்கட் பிரபு. அந்த படம் வெங்கட்பிரபுவிற்கு மட்டுமின்றி நடிகர் ஜெய், சிவா போன்ற பலருக்கும் முக்கியமான படமாக அமைந்தது.

venkat prabhu

venkat prabhu

அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கோவா போன்ற திரைப்படங்கள் வரவேற்பை பெற்றாலும் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது 2011 இல் வந்த மங்காத்தா திரைப்படம்தான். அதன் பிறகு 2021 இல் வெளிவந்த மாநாடு திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

ப்ரேம்ஜி செய்த சம்பவம்:

நடிகர் ப்ரேம்ஜி வெங்கட்பிரபுவின் தம்பியாவார். எனவே வெங்கட் பிரபு அவரது அனைத்து படங்களிலும் ப்ரேம்ஜிக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்துவிடுவார். இடையில் ஒரு பேட்டியில் ப்ரேம் ஜி கல்லூரி காலங்களில் செய்த அட்டகாசம் குறித்து வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

premgi

premgi

ப்ரேம் ஜிக்கு சிறு வயது முதலே இசையின் மீது ஆர்வம் இருந்துள்ளது. எனவே அவரை வெளிநாட்டில் உள்ள இசை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்கலாம் என நினைத்துள்ளார் வெங்கட் பிரபு. ஆனால் வெளிநாடு சென்ற ப்ரேம் ஜி அங்கு இசையை கற்றுகொள்ளாமல் ஊர் சுற்றிக்கொண்டு ஜாலி செய்து கொண்டிருந்திருக்கிறார். இது தெரியாமல் வருடா வருடம் பணி அனுப்பி வந்துள்ளார் வெங்கட்பிரபு.இதனை வெங்கட்பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: போய் பிச்சைக்காரங்களோட படுங்க!.. இயக்குனரால் அஞ்சலிக்கு வந்த சங்கடம்…

google news
Continue Reading

More in Cinema History

To Top