என்ன சமந்தா இப்படி மாறிட்டீங்க.! ஒரே புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்.!

by Manikandan |
samantha
X

திருமணம், விவாகரத்து என பல விவகாரங்களை கடந்து வந்தால், அடுத்தடுத்து அந்த நடிகையை திரையுலகினர் ஒதுக்கி வைத்து விடுவர். இதுதான் திரையுலகின் சோக நிலைமை. ஆனால் அதனை முற்றிலும் மாற்றி காட்டியவர் சமந்தா.

samantha

திருமணத்திற்கு முன்பு அவருக்கு எப்படி மார்க்கெட் இருந்ததோ அதனை விட அதிகமாக தான் தற்போது இருக்கிறது. தற்போது தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என அவருக்கு படங்கள் குவிந்து வருகிறது. இதில், அவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் காதுவாக்குல ரெண்டு காதல்.

samantha-vijay sethubathi

samantha-vijay sethubathi

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். நயன்தாரா, சமந்தா என இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தில் இருந்து சில போட்டோ வெளியானது. அது பாடல் காட்சி ஷூட்டிங் என தெரிகிறது.

இதையும் படியுங்களேன் - உலகநாயகனை உதறிவிட்ட நடிகர்.! எவளோ பெரிய வாய்ப்பு வேணாம்னு சொல்லிட்டாரே.!?

அதில் விஜய் சேதுபதி, சமந்தா கலக்கான உடையில் இருக்கின்றனர். அதில் விஜய் சேதுபதி நன்றாக இருக்கிறார். ஆனால், சமந்தா ஆள் அடையாளம் தெரியாத படி இருக்கிறார். இது சமந்தாவா என்பதே ரசிகர்களுக்கு குழப்பமாக இருக்கிறது. அந்தளவுக்கு இருக்கிறார் சமந்தா.

Next Story