‘தளபதி 69’க்கும் யுவன்தான் மியூஸிக்கா? ஒரு தடவ பட்டது போதாதா? வைரலாகும் செய்தி

Thalapathy 69 : விஜயின் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன திரைப்படம் கோட். படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவான விஜய் படங்கள்போல் இல்லாமல் இந்த படம் தமிழ் ரசிகர்களை மட்டுமே பெருமளவு கவர்ந்துள்ளது.

மற்ற மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற ரசிகர்களை கோட் திரைப்படம் பெரிதாக ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 126 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 300 கோடிக்கு மேலாக வசூல் சாதனையை பெற்றிருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: அந்த சீரியலை முடிச்சது இதுக்குதானா? பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் ரீல் சர்ச்சை ஜோடி…

அஜித்தை வைத்து ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கும் அப்படிப்பட்ட ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுப்பார் என்றே ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். அது தமிழ் ரசிகர்களை மட்டுமே ஈர்த்திருக்கிறது. விஜய்யுடன் சேர்ந்து மற்ற நடிகர்களான பிரபுதேவா பிரசாந்த் மோகன் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .

ஆக மொத்தம் படம் ஒரு கலவையான விமர்சனத்தையே பெற்றதாக தெரிகிறது. ஆனால் எல்லா எதிர்மறை விமர்சனத்தையும் மறைக்கும் விதமாக படம் ஒரு விறுவிறுப்பை நோக்கி சென்றதால் அந்த விமர்சனங்கள் எல்லாம் பெரிதாக எடுபடவில்லை.

இதையும் படிங்க: ரஹ்மான்கிட்ட அத கேட்டுட்டு இப்போ வரைக்கும் ஃபீல் பண்றேன்! சூர்யாவுக்கு இப்படி ஒரு கில்டியா?

படம் ஆரம்பத்திலேயே யுவன் சங்கர் ராஜா இசை என்று சொன்னதுமே அனைவரும் கதி கலங்கி போயிருந்தார்கள். அதற்கேற்ற வகையில் படத்தின் ஒவ்வொரு பாடலும் வெளியாக வெளியாக ரசிகர்களுக்கு ஒரு பயமே வந்துவிட்டது. விஜய் படம் என்றாலே பாட்டு தான் பிளஸ்.

ஆனால் கோட் படத்தை பொருத்தவரைக்கும் ஒரு பாடலும் நல்லா இல்லையே என்றுதான் அனைவரும் கூறி வந்தார்கள். ஆனால் அதை திரையில் பார்க்கும் பொழுது எல்லா பாடலையும் இப்போது ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். அதையும் தாண்டி படத்தில் பிஜிஎம் மாஸாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் செய்யும் கோபி.. சண்டையிட்டு கொள்ளும் முத்து, மீனா… பாண்டியனுக்கு பிறந்தநாள்…

அதுவும் கடைசி கிளைமாக்ஸில் விஜய் டபுள் ஆக வரும் பொழுது அப்பொழுது ஒலிக்கும் ஒரு பிஜிஎம் தியேட்டரையே அதிர வைத்தது. இந்த நிலையில் அடுத்ததாக விஜய் அவருடைய 69 ஆவது படத்தில் இணைய இருக்கிறார். அந்த படத்தை எச் வினோத் இயக்குவதாக தெரிகிறது.

அந்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசை என்ற ஒரு செய்தி இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு சில பேர் பயந்து போயிருக்கிறார்கள். இன்னும் சிலர் அனிருத்துக்கு யுவன் பரவாயில்லை என்று கூறி வருகிறார்கள்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it