சினிமாவில் அதிகமாக அரசியல் பேசும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிவண்ணன். மணிவண்ணன் இயக்கிய படங்களில் பெரும்பாலும் அரசியல் நகைச்சுவைகள் இருப்பதை பார்க்க முடியும். பல கதாநாயகர்களை அப்போது வளர்த்துவிட்டுள்ளார் மணிவண்ணன்.
முக்கியமாக நடிகர் சத்யராஜ்க்கு அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ளார் மணிவண்ணன். அதில் முக்கியமான திரைப்படம் அமைதிபடை. இப்போது வரை மக்களால் வெகுவாக பேசப்படும் ஒரு திரைப்படமாக இருக்கிறது அமைதிப்படை திரைப்படம்.
இதனால் அப்போது பலரும் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என ஆசைப்பட்டனர். அப்படி ஆசைப்பட்டவர்களில் இயக்குனர் விக்ரமனும் ஒருவர். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமன். ஒரு காலத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சேருவதற்கு இவர் முயற்சித்து வந்தார்.
மணிவண்ணன் படம் இயக்கி கொண்டிருந்தபோது அவரை படப்பிடிப்பு தளத்திலேயே அவரை சந்தித்தார் விக்ரமன். உங்களிடம் உதவி இயக்குனராக வேண்டும் என நேரடியாக கேட்டுள்ளார் விக்ரமன். மணிவண்னனிடம் இப்படி பலர் வாய்ப்புகள் கேட்டுள்ளதால் விக்ரமினிற்கு ஒரு டாஸ்க் வைத்துள்ளார் மணிவண்ணன்.
தமிழ் சினிமாவில் இதுவரை வராத புதிதான 100 பட தலைப்புகளை எழுதி தர வேண்டும் என்றார் மணிவண்ணன். அதை எழுதுவதற்கு எப்படியும் 2 நாட்களாவது ஆகும் என எதிர்பார்த்தார் மணிவண்ணன். ஆனால் அன்று மாலையே 100 தலைப்புகளை எழுதிக்கொண்டு வந்து மணிவண்ணன் முன்னால் நின்றார் விக்ரமன்.
அவரது வேகத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட மணிவண்ணன் அவரை உடனே உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார்.
இதையும் படிங்க: மெரினா பீச்சில் சினிமா வாய்ப்பு வாங்கிய சரோஜா தேவி! – இப்படி ஒரு பிளாஸ்பேக்கா!.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…