என்னை எல்லாரும் வச்சி செஞ்சபோது கமல் சார் சொன்னது இதுதான்!.. நெகிழும் நெல்சன்!…

Published on: August 18, 2023
kamal
---Advertisement---

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நெல்சன். இவர் இயக்கிய படங்களில் பீஸ்ட் தவிற மற்ற எல்லா படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

விஜய், பூஜா ஹெட்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான பிறகு, குறிப்பாக நெல்சனை தான் பலரும் ட்ரோல் செய்தனர். எத்தனையோ படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது.

இதையும் படிங்க- யாருமே என்ன நம்பல.. அப்போ ரஜினி ஒன்னு சொன்னார்.. நெகிழ்ந்து போன நெல்சன்….

ஆனால் ஏனோ நெல்சன் கடுமயாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்து அவர் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருவதோடு, வசூல் ரீதியாகவும் 400 கோடியை தாண்டி சாதனை படைத்து வருகிறது. இயக்குநர் நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா 2018ம் ஆண்டு வெளியானது.

இடைவெளியின்றி அடுத்தடுத்து 4 படங்களை இயக்கியுள்ளார் நெல்சன். இதற்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் வேலை செய்து வந்த நெல்சனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமல்ஹாசனை ஏற்கனவே நன்றாக தெரியும். இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் வெளியான சமயத்தில், நெல்சன் கமல்ஹாசனை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நெல்சன் பதிலளித்துள்ளார். அதில் பீஸ்ட் திரைப்படம் வெளியான சமயத்தில் நான் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து பேசியது உண்மை தான். ஏற்கனவே அவருக்கு என்னை தெரியும்.

அதனால் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது கமல், நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் ஒரு படம் பண்ணலாம் என்றார். அப்போது அதற்கான நேரம் அமையவில்லை. வரும்காலத்தில் பண்ண வாய்ப்பிருக்கிறது. அதற்கேற்ற சூழல் அமைந்தால், கண்டிப்பாக கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நெல்சன் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

இதையும் படிங்க- சூப்பர்ஸ்டார் ரஜினியா? விஜயா?… நெல்சன் சொன்ன அடடே பதில்.. பொழைச்சிக்குவ ராசா!

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.