Cinema History
அதை நினைச்சா அடிவயிற்றில் நெருப்பைப் போட்டு பிசைவது போல இருக்கு…. சிவாஜியா இப்படி சொல்வது?
தமிழ்த்திரை உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கட்டிப் போட்டவர்கள் எம்ஜிஆரும், சிவாஜியும். இருவரின் படங்களுமே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விடும்.
1983ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அந்த விழாவில் பேசிய நடிகர் திலகம் சிவாஜி தனக்கும், எம்ஜிஆருக்குமான நட்பு குறித்து பேசி அசத்தினார்.
அவர், புரட்சித்தலைவர் என்று சொல்லும்போதெல்லாம் உடல் புல்லரிக்கிறது. எதற்காக உடன்பிறப்பு அல்லவா என்றாார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மேலும் என்னென்ன சொன்னார் என்று பார்ப்போமா…
நான் கலைஞன் அல்லவா… எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்று தெரிந்தவன். தம்பியாகிய நான் தாய் ஸ்தானத்தில் இருந்து அவருக்குக் கிடைத்த பெருமையைப் பங்கு கொள்கிறேன்.
தாயிருந்தால் அவரது வயிறு எப்படி குளிர்கிறதோ, ஏழை மக்களின் வயிறைப் போல அப்படி வயிறு குளிர்ச்சியாக இருக்கிறது. மனம் நிறைந்து இருக்கிறது. உள்ளம் பூரிக்கிறது. சொல்வதற்கு வாக்கு தடுமாறுகிறது. தமிழ் அல்லவா?
அண்ணனுக்குக் கிடைக்கும் பெருமை நமக்கும் கிடைத்ததே என்று எங்கிருந்தாலும் நினைத்துக் கொண்டு இருப்பவன் நான். எங்களுடைய நிலை புரியும் உங்களுக்கு. ஒரே இடத்தில் வாழ்ந்து, ஒரே இடத்தில் படுத்தது, ஒரு இடத்திலே உணவு உண்டவர்கள் தான் நானும் எனது அருமை அண்ணனும்.
காலத்தால் பிரிக்க முடியாத யாரும் பிரிக்க முடியாத ஒரு நட்பை அரசியல் என்ற பாழாய்ப்போன அரக்கன் பிரித்து விட்டானே. அதை நினைக்கும்போது தான் அடிவயிற்றிலே நெருப்பைப் போட்டுக் குழப்புவது போல உள்ளது என்றார் நடிகர் திலகம்.
இதையும் படிங்க… காத்திருந்து குறி வச்ச மாதிரி தெரியுது.. ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த லைக்கா
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் இணைந்து நடித்த படம் கூண்டுக்கிளி. அதன்பிறகு இருவரும் இணைந்து படம் நடிக்கவே இல்லை. ஆனால் நிஜவாழ்க்கையில் இருவரும் அண்ணன், தம்பிகளாகவே பழகி வந்தனர். சிவாஜி எம்ஜிஆரைப் பார்த்து அண்ணன் என்று உரிமையோடு அழைப்பதுண்டு. ரசிகர்கள் மத்தியில் தான் பாகுபாடு பார்க்கிறார்கள். அதுபோல் தான் கமல், ரஜினி நட்பு.