டிரான்ஃபர்மேஷனா இப்படி இருக்கனும்டா! இந்தியன் - இந்தியன்2 அனிருத்தின் வளர்ச்சி.. வைரலாகும் புகைப்படம்

by Rohini |   ( Updated:2024-06-01 09:19:02  )
aniruth
X

aniruth

Aniruth Ravichandran: தமிழ் சினிமாவில் ஒரு இளம் இசை அமைப்பாளராக திகழ்ந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடவராகவும் இருந்து வருகிறார். தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே அவருடைய திறமையை நிரூபித்து காட்டினார்.

அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் விஜய் அஜித் என சூப்பர் ஹீரோக்களுக்கு இசை அமைத்து அதன் மூலம் ஒரு ராக் ஸ்டார் ஆக உயர்ந்தார் அனிருத். இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு வளர்ச்சியா என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு தன்னுடைய வளர்ச்சி பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் அனிருத். வெளிநாடுகளிலும் கச்சேரிகளை நடத்தி வரும் அனிருத் இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அது அனிருத் இசையில் தான் என்ற அளவுக்கு மாற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க: சூரி சொல்லவே இல்ல!. அட அந்த படத்தோட காப்பிதான் கருடனா?!.. கல்லா கட்றாங்கப்பா நல்லா!..

தற்போது கூட இந்தியன் 2 படத்திலும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் இன்று இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி இந்தியன் 2 படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அனிருத்தின் ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியன் படத்தின் முதல் பாகம் 1995 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அந்த ரிலீஸ் சமயத்தில் அனிருத் நான்கு வயது குழந்தையாக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத்.

இதையும் படிங்க: என்ன மனுஷன்யா? விஜய்கிட்ட இருந்து கண்டிப்பா இத கத்துக்கனும்.. மைக் மோகனா சொன்னது?

இதை ஒரு டிரான்ஃபர்மேஷனாக காட்டும் வகையில் அனிருத்தின் அன்றும் இன்றும் மாதிரியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதை பார்த்த ரசிகர்கள் டிரான்ஸ்பர்மேஷன் என்றால் இப்படி இருக்கணும் டா என அந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்தியன் படம் ரிலீஸ் சமயத்தில் அனிருத்தே நினைத்திருக்க மாட்டார் .ஏன் அவருடைய குடும்பமே நினைத்திருக்காது.

anir

anir

வருங்காலத்தில் அந்த இந்தியன் தாத்தாவுக்கு தன் மகன்தான் இசையமைக்கப் போகிறான் என்று. இது எப்படிப்பட்ட ஒரு வளர்ச்சி. இதை பார்க்கும் போது நமக்கும் பூரிப்பாக இருக்கிறது. அந்த நான்கு வயது குழந்தையா இப்போது இந்தியன் 2 வில் கமலுக்காக மிகப் பிரம்மாண்ட முறையில் பாடல்களை கொடுத்திருப்பது என ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இதையும் படிங்க: நீங்க மாலை போட்டதுக்காக நாங்க என்ன சாமி படமா எடுக்க முடியும்? இளையராஜாவை சீண்டிய பாக்கியராஜ்

Next Story