ரகுவரனை பேட்டி காண சென்ற நிரூபர்!..பேட்டி நடக்கல!..எங்க கூட்டிட்டு போனாருனு தெரியுமா!..
நடிகர் குரல் என்ற பத்திரிக்கையில் முதலில் நிரூபராக இருந்த செய்யாறு பாலு என்பவர் ஒரு முறை நடிகர் ரகுவரனை பேட்டி காணச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் ரகுவரன் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்தாராம்.
செய்யாறு பாலு அவர் வீட்டிற்கு போனதும் இவர் மட்டும் தான் இருந்திருக்கிறார். அறைக்குள் போனதும் ஒரு பேஜ்லர் ரூம் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு குப்பையாக இருந்ததாம். இது 1997 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு. பேட்டி காண சென்ற நிரூபரிடமே பல கேள்விகளை கேட்டிருக்கிறார் ரகுவரன்.
இதையும் படிங்க : ‘உள்ளத்தை அள்ளித்தா’ இரண்டாம் பாகம் தயாராகிறதா?.. நடிகரின் ஆசையை அலட்சியப்படுத்திய சுந்தர்.சி!..
இலக்கியம், நாடகம், ரகுவரனின் படங்கள் பற்றியே அந்த நிரூபரிடம் கேட்டிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் நிரூபர் டேப்பை ஆன் செய்து கேள்விகளை கேட்க சிறிது நேரத்தில் அந்த நிரூபருக்கு கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டதாம். காரணம் அவர் சாப்பிடாமல் வந்தது தான்.
இதை அறிந்த ரகுவரன் உடனே அவரை அழைத்துக் கொண்டு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று சைனிஸ் உணவுகளை வாங்கி கொடுத்து வயிறார சாப்பிட வைத்திருக்கிறார். ஆனால் அந்த நிரூபருக்கோ கூச்சமாக இருந்திருக்கிறது . ஏனெனில் இந்த வகை உணவுகளை அவர் சாப்பிட்டதே இல்லையாம். இதனால் அந்த கூச்சத்தை போக்க நிரூபரின் தட்டிலிருந்து ரகுவரன் எடுத்து சாப்பிட்டாராம். இப்பொழுது சாப்பிடுங்கள் என்று சொல்லி அந்த நிரூபரை சாப்பிட வைத்தாராம் ரகுவரன். மேலும் திரும்பும் போது சில வாழ்க்கை தத்துவங்களையும் போதித்திருக்கிறார் ரகுவரன். மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ள கூடாது என கூறியிருக்கிறார்.