ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் இல்லையா? என்னடா இது ஒரே குழப்பமா இருக்கு!..

by sankaran v |   ( Updated:2024-03-14 08:51:26  )
Jailer2
X

Jailer2

ஜெயிலர் படம் ரஜினிகாந்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு மெகா ஹிட்டைக் கொடுத்து அசத்தியது. படத்தில் ரஜினிக்குச் சமமாக வில்லன் விநாயக்கின் நடிப்பும் பாராட்டும்படி அமைந்து இருந்தது.

அதேபோல் நெல்சன் திலீப்குமாரும் இன்றைய காலத்திற்கு ஏற்ப ஸ்கிரிப்டை பக்காவாக உருவாக்கி இளம் ரசிகர்களையும் கவர்ந்து இருந்தார். இந்தப் படத்தின் 2ம் பாகம் வருமா? அப்படி வந்தால் அது எப்படி இருக்கும்? அதற்கான தகவல்கள் எப்போது வரும்? ரஜினிகாந்த் நடிப்பாரா என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகத்தையும் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். அதற்கான ஸ்கிரிப்டையும் எழுதிவருகிறாராம். இருந்தாலும் இன்னும் அதற்கான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதையும் படிங்க... இந்தப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஷோபனாவா? எல்லாருக்கும் ஃபேவரைட்.. என்ன பாடல் தெரியுமா?

வேட்டையன் படப்பிடிப்பு 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் தலைவர் 171 ஐ இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஜெயிலர் படம் கடந்த ஆண்டு தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. வசூலிலும் சாதனை படைத்தது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்னா மேனன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், கிஷோர், ரெடின் கிங்ஸ்லி, விடிவி.கணேஷ் உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து இருந்தது.

Rajni

Rajni

ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை டைரக்டர் நெல்சன் எழுதிவருவதாக நடிகை மிர்ணா மேனன் சில மாதங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார்.

நெல்சன் திலீப்குமாரும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சில காலம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இந்தப்படத்தில் ரஜினிகாந்த் நடிப்பாரா என்றும் தெளிவாகத் தெரியவில்லையாம்.

ரஜினிகாந்த் தற்போது நடிக்கும் வேட்டையன் படத்தில் அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, பகத் பாசில், துஷ்ரா விஜயன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story