ஸ்டூடியோவில் அடிதடி சண்டை போட்ட யேசுதாஸ் - துண்ட காணோம்னு ஹார்மோனியத்த தூக்கிட்டு ஓடிய தேவா!

by Rohini |   ( Updated:2023-08-24 13:38:13  )
deva
X

deva

கானாப்பாடலுக்கு என்று மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் தேவா. தேவா இசையமைத்த பாடல்கள் மிகவும் ரசிக்க கூடிய வகையில் இருக்கும். நிறைய பேர் அவர் பாடல்களை இளையராஜாவின் இசை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.எப்படி வாலியின் அருமையான பாடல்கள் எல்லாம் கண்ணதாசன் பாடல் என்று நினைத்தார்களோ அதே போலதான் இவரையும் இளையராஜா இசை என்று நினைக்கிறார்கள்.

இன்றும் ரஜினியின் எல்லாப் பட டைட்டிலில் இவர் இசையே ஒலிக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தேவா பேட்டி கொடுக்கும் போது ஒரு சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்தார். அதாவது இவர் இசையமைக்கும் போது டிராக்கையும் சேர்த்து பாடி வைத்துக் கொள்வாராம். அதை கூடவே இருந்தவர்கள் தேவாவின் குரலிலேயே கேட்டு கேட்டு பழகிவிடுவார்களாம்.

இதையும் படிங்க : 5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய ராஜமவுலி படம்!.. குவியும் பாராட்டுக்கள்!…

ஒரு படத்திற்காக பாட வந்த யேசுதாஸிடம் அதற்கான வரிகளை கவிஞர் சொல்ல யேசுதாஸ் எழுதிக் கொண்டிருந்தாராம். அப்போது ஒரு வார்த்தையை தவறாக எழுதாத வகையில் மிக அழுத்தமாக மீண்டும் மீண்டும் அந்த கவிஞர் சொல்ல கோபத்தில் யேசுதாஸ் எழுந்துச்சு வெளியே போ என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு அந்தப் படத்தின் தயாரிப்பாளரான அன்பாலயா பிரபாகரன் வந்து உட்கார்ந்தாராம்.

சுருதி என்னவென தேவா யேசுதாஸுக்கு சொல்ல யேசுதாஸ் அதை பின் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாராம். ஏற்கெனவே அந்தப் பாடலின் டிராக்கை தேவாவின் குரலில் அன்பாலயா கேட்டு கேட்டு ஒரு இடத்தில் யேசுதாஸை திருத்தியிருக்கிறார். உடனே கோபத்தில் யேசுதாஸ் நீ யாரு என்று கேட்க,

இதையும் படிங்க : 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!.. சிறந்த பட விருதை தட்டி சென்ற விஜய் சேதுபதி படம்..

தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்று சொல்லாமல் தேவாவின் உதவியாளர் என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு யேசுதாஸுக்கும் அன்பாலயா பிரபாகரனுக்கும் இடையில் பெரிய சண்டையே வந்து விட்டதாம். அங்கு இருந்த பொருள்களை எல்லாம் யேசுதாஸ் தூக்கி விட்டெறிய அதை பார்த்ததும் தேவா தன் ஹார்மோனியத்தை தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிட்டாராம்.

அதன் பின் தேவாவின் இசையில் யேசுதாஸ் 6 வருடங்கள் பாடவே இல்லையாம். அழைத்தாலும் நான் வரமாட்டேன் என்று சொல்லி மறுத்துவிடுவாராம். இயல்பாகவே யேசுதாஸ் சின்ன விஷயமானாலும் உடனே டென்சனாகி விடுவாராம். சென்சிட்டிவான பேர்வழியாம். இதை மிகவும் எளிய நடையில் வேடிக்கையாக அந்தப் பேட்டியில் தேவாவே கூறினார்.

Next Story