தலைக்கு மேல பிரச்சினைனு சும்மாவா சொன்னாங்க! இவ்ளோதூரம் வந்தும் வீணாப் போச்சே

by Rohini |
simbu
X

simbu

கோலிவுட்டில் ஒரு ஸ்டைலிஷான ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. ஒரு பெரிய கம்பேக்கிற்கு பிறகு மூன்று படங்களை கொடுத்திருந்தாலும் அதனை எடுத்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறார் சிம்பு. பத்து தல படத்திற்கு பிறகு கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது.

ஆனால் அதன் பிறகு தான் அவருக்கு பிரச்சனையே ஆரம்பமானது. ஐசரி கணேஷ் சிம்பு மீது பெரும் அதிருப்தியில் இருந்தார். வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு அவருடைய கம்பெனியில் தொடர்ந்து இரண்டு படங்கள் நடித்து கொடுப்பதாக கூறிவிட்டு இப்போது கமலுடன் இணைந்து இருப்பது ஐசரி கணேஷ்க்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : ஹோட்டல் குருவில் நடிகையுடன் ரூம் போட்ட ரஜினி!… எம்ஜிஆருக்கு வந்ததே கோபம்!.. அப்புறம் தான் சம்பவம்!..

இது பற்றிய பிரச்சனைகள் எழுந்து இப்போது இரு தரப்பும் சுமூகமாக பேசி பிரச்சனையை முடித்துக் கொண்டது. ஐசரி கணேஷ் கூறியவாரே இரண்டு படங்களில் ஒரு படத்திற்கு சிம்பு 60 நாட்கள் கால் சீட்டு கொடுக்கிறேன். அதற்குள் மொத்த படத்தையும் முடித்தாக வேண்டும் என கண்டிஷன் போட்டாராம். இந்தப் படத்தை அடங்க மறு இயக்குனர் ரத்தினவேலு எடுப்பதாக இருந்ததாம்.

ஆனால் ரத்தினவேலு அவருடைய கதைப்படி சிம்பு இப்போது இருக்கும் தோற்றத்தில் இருக்கக் கூடாது எனவும் முழுவதுமாக முடியை கட் செய்து விட்டு தான் நடிக்க வேண்டும் எனவும் கூறினாராம். இதைப் பற்றி சிம்பு தரப்பில் எதுவும் இன்னும் கூறவில்லையாம்.

இதையும் படிங்க : ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ டையலாக்கெல்லாம் போச்சா? வசனத்தை பேசி மொக்க வாங்கிய ரஜினி

முடியை நீளமாக வைத்துக்கொண்டு படுமாஸாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் சிம்பு திடீரென முடியை கட் பண்ணி எப்படி வந்து நிற்பார். ஒரு வேளை அவர் முடியாது என சொல்லிவிட்டால் அவருக்கு பதிலாக ஜெயம் ரவியை கொடுங்கள் என ரத்தினவேலு கேட்கிறாராம்.

இப்போது ஐசரி கணேஷ் தரப்பில் என்ன முடிவு எடுப்பார்கள்? சிம்பு இதற்கு ஒத்துக் கொள்வாரா? அல்லது வேறொரு இயக்குனரை வைத்து வேறொரு கதையில் சிம்புவை நடிக்க வைப்பார்களா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

Next Story