More
Categories: Cinema News latest news

விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு பறந்த பச்சை கிளிகள்.! ஐஸ்வர்யா மட்டும் எங்கே.?!

தீடிரென கிடைத்த ஓய்வை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டு சில நடிகைகள் தங்கள் விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடி வருகின்றனர்.  அந்த வகையில் சமந்தா சுவிட்சர்லாந்திலும், பூஜா ஹெக்டே மால தீவிற்கும், வேதிகா துபாய்க்கும்  சென்றுள்ளனர் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் இந்தியாவில் உள்ள காஷ்மீர்க்கு சென்று வந்துள்ளார்.

சமந்தா:

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் கணவரை பிரிந்த பின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது.

தற்போது, நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சுற்றுலாப்பயணத்தில் இருக்கிறார். இது சமந்தாவின் மற்ற சுற்றுலாப் பயணங்களைப்போல் இல்லாமல் இந்த சுற்றுலாப் பயணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டிலும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

பூஜா ஹெக்டே:

மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ திரைப்படத்தில் நடிக்க வந்தவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார் பூஜா ஹெக்டே.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், மால தீவு சென்று அங்கு பிகினி உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

வேதிகா:

ஒல்லி பெல்லி அழகியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் வெகு சீக்கிரத்திலே ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை வேதிகா. இவர் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து நன்கு பிரபலமாகியுள்ளார்.

இவர் கிளாமரான உடைகளை அணிந்து ஹாட்டான போட்டோக்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில், கடந்த ஆண்டு மாலத்தீவில் பிகினி உடையில் வேதிகா நடத்திய போட்டோ ஷூட்  வைரலானது.

ஐஸ்வர்யா ராஜேஷ்:

சமீபத்தில் காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இயற்கையை ரசித்து வருகிறார். தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் போது, ​​ அவ்வப்போது அங்கு பார்க்கும் இடங்களை, இயற்கை அழகு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்தார்.

காஷ்மீர் சுற்றுப்பயணத்தை ரசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அங்குள்ள காட்சிகள் மற்றும் பனிப்பொழிவுகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்.

Published by
Manikandan