கோலிவுட் ஹிட் இயக்குனர்.. ஆனா இப்போ லாட்ஜ் ஓனர்... அதிலும் அந்த லாட்ஜ் பேரு தான்... சர்ப்ரைஸ்...
80ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் இருந்த இயக்குனர்கள் எல்லாருமே மிகப்பெரிய புகழை அடைந்தாலும், வெற்றி படங்களை கொடுத்தாலும் அவர்கள் சில இயக்குனர்கள் நிரந்தரமான இடத்தினை பிடிக்க தவறினர்.
பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் டி.பி.கஜேந்திரன். பாலசந்தர்கிட்ட இருந்த விசு, தனியா படம் பண்ண ஆரம்பிச்சதும் அவருடன் கஜேந்திரனும் சென்று விட்டாராம். சம்சாரம் அது மின்சாரம் படம் ரிலீஸாகி மாஸ் ஹிட் அடித்தது. அதனால் டி.பி.கஜேந்திரனுக்கு இயக்குனர் வாய்ப்பை ராம.நாராயணன் கொடுத்திருக்கிறார்.
அதற்கு அவர் வைத்த ஒரே விசுவின் கால்ஷீட் வேண்டும் என்பது தானாம். இதை விசுவிடம் கூற அவரோ டபுள் ஓகேப்பா உனக்கு இல்லனு சொல்வேனா என உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படி உருவான படம் தான் வீடு மனைவி மக்கள். இப்படம் தமிழ் மட்டுமல்லாது கன்னடத்திலுமே இவரே இயக்கி மெகா ஹிட் கொடுத்தது.
எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பாசமுள்ள பாண்டியரே, பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்கள் இவரின் இயக்கத்தில் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவை.
இந்நிலையில், டி.பி.கஜேந்திரன் தற்போது வாய்ப்பு இல்லாமல் லாட்ஜ் நடத்தி வருகிறாராம். இதில் என்னவொரு சிறப்பு என்றால் ஒவ்வொரு தளத்துக்கும் தன்னை சினிமாவில் வளர்த்து விட்டவர் பெயர்களை வைத்திருக்கிறாராம். அதன்படி, அந்த லாட்ஜின் முதல் தளத்துக்கு விசுவின் பெயர். இரண்டாம் தளத்துக்கு பாலசந்தர் பெயர். மூன்றாம் தளத்துக்கு பாரதிராஜா பெயர் என வைத்திருக்கிறார்.