எங்கே இருக்கிறார் விஜே பிரியங்கா.. அவர் தற்போதைய நிலை என்ன?
Priyanka Deshpande: மணிமேகலையின் பதிவால் இணையத்தில் சர்ச்சையாகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட விஜே பிரியங்கா தரப்பிலிருந்து அவர் நண்பர்கள் மட்டுமே இதுவரை பேச தொடங்கி இருக்கும் நிலையில் அவர் தரப்பு எதுவும் பதில் அளிக்கவில்லை.
விஜய் டிவியின் பிரபல ஆங்கராக இருப்பவர் விஜே பிரியங்கா. இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபைனலில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்ற தகவல்கள் ஏற்கனவே கசிந்துவிட்டது. ஆனால் செமி பைனல் நடந்தபோது ஏற்பட்ட பிரச்சனையால் ஆங்கராக இருந்த மணிமேகலை வெளியேறினார்.
இதையும் படிங்க: ரஜினி படத்துல ஓபனிங் சாங்… கமல் பாடுவதற்கு வாய்ப்பு?
தனக்கு புகழ் மற்றும் பணத்தை விட சுயமரியாதை தான் முக்கியம் என பேசி இருப்பார். இவருடைய பதிவிற்கு கீழ் ஏகப்பட்ட பிரபலங்கள் மணியின் தைரியத்தை பாராட்டி பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இருந்து பிரியங்காவின் நண்பர்கள் ஆன பாவ்னி ரெட்டி, மது, பூஜா, குரோஷி, சுனிதா உள்ளிட்டோர் இது குறித்து பேச தொடங்கி இருக்கின்றனர்.
திவ்யா துரைசாமி எலிமினேஷனில் நடந்த போது ஏற்பட்ட மனக்கசப்பில் மணிமேகலையை மன்னிப்பு கேட்க கூட அவர் முடியாது என மறுத்ததே அவருடைய வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கோமாளியாக இருக்கும் சுடிதார் தன்னுடைய சேனலில் பேசி இருப்பது வைரலாகி வருகிறது.
இது குறித்து சுனிதா கூறும் போது, பிரியங்கா ரொம்பவே நல்ல மனிதர். எல்லாரிடமும் கலகலப்பாக நடந்து கொள்வார். குக் வித் கோமாளி தயாரிப்பாளர்களே அவரை கலகலப்பாக இருக்க கூறும் போது கூட சமையலில் அதிக ஆர்வம் காட்டினார். இந்த பிரச்சினையால் தற்போது விஜே பிரியங்கா மனமுடைந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: மணிமேகலை சொல்றது உண்மைதான்… சக ஆங்கர் ரக்ஷன் சொல்வது என்ன?
ஆனால் இதே சுனிதாவுக்கும் மணிமேகலைக்கும் கடந்த ஆண்டு பிரச்சனை இருந்தது. சுனிதா பிரியங்காவின் நெருங்கிய தோழி என்பதையும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மணிமேகலையின் ஆதரவாளர்கள் யாரும் அவருக்கு நெருங்கிய பந்தம் இல்லை.. ஆனால் பிரியங்காவிற்காக பேசும் அனைவருமே அவருடைய நெருங்கிய தோழர்கள் மட்டுமே என்பதும் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.