ஹிட் படத்தை மிஸ் செய்த டாப் 5 பிரபலங்கள்.. அட ஒரு படத்திற்கு இவ்வளவு பேரா?...
தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் மிஸ் செய்த படத்தினை பற்றி கூறினால் நமக்கே கடுப்பு வரும். இந்த படத்த எப்படி பாஸ் மிஸ் பண்ணீங்கனு தான் கேட்கத்தோணும். அப்படி டாப் 5 பிரபலங்கள் மிஸ் செய்த படங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
நானும் ரவுடி தான்:
விக்னேஷ் சிவனின் மாஸ் வெற்றி படமாக அமைந்த நானும் ரவுடி தான் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது அனிருத் தானாம். என்ன நினைச்சாரோ, நடிப்பு வேண்டாம். மியூசிக் வேணுமுனா பண்ணுறேன் என்று விலகி விட்டாராம். இந்த கலவரத்தால் கால்ஷூட் கொடுத்த சமந்தாவும் படத்தில் விலக அதற்கடுத்து இணைந்தவர்கள் தான் விஜய் சேதுபதி மற்றும் நயன் ஜோடி.
இதையும் படிங்க: இவங்க எப்பதான் திருந்துவாங்க!…லவ் டுடே பிரதீப்பை திட்டிய கோமாளி பட நடிகை…
பாகுபலி:
சூர்யாவும், சமந்தாவும் போட்டி போட்டுக்கொண்டு எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என ராஜவுலியிடம் கேட்டனர். ஆனால், ராஜமௌலி கேட்ட சில பிரபலங்கள் அவரிடம் நோ சொல்லி இருக்கிறார்கள். பாகுபலி படத்திம் இடம் பெற்ற சிவகாமி வேடத்திற்கு முதலில் ஸ்ரீதேவியிடம் தான் ராஜமௌலி கேட்டிருக்கிறார். புலியில் வாங்கிய பல்பே போதும். நான் நடிக்க மாட்டேன் என அவர் நோ சொல்லிவிட்டார்.
அவருக்கு பதில் நடிக்கவந்தவர்தான் ரம்யா கிருஷ்ணன். அதுபோல பிரபாஸ் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது ரித்திக் ரோஷன் தானாம். ஆனால் அவர் பெரிதாக ஆர்வம் காட்டாததால் அந்த வேடம் பிரபாஸிற்கு சென்றதாம்.
ராணா வேடத்திற்கு ஜான் ஆப்ரஹாம் மற்றும் விவேக் ஓபராய் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினாராம். அவர்கள் நோ சொல்லிவிட்டதாக தெரிகிறது. அதிலும் சத்யராஜின் கட்டப்பா வேடத்தினை மோகன்லாலிடம் கூற அவருக்கு இந்த ரோல் பிடிக்கவில்லையாம். வட போச்சோ!