Kollywood: இந்த வருஷம் வெளியான படத்தில் அதிக வசூல்!.. விஜய் கூட லிஸ்ட்டில் இல்லையே!...

#image_title
2024 Movies: இந்த 2024ம் ஆண்டு முடிவதற்கு இன்னும் 50 நாட்கள் தான் உள்ளன. இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றன. விஜய் நடிப்பில் கோட், ரஜினி நடிப்பில் வேட்டையன் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களும் இதில் அடக்கம்.
அதோடு தீபாவளிக்கு அமரன், பிரதர், பிளடி பெக்கர் என வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களும் வெளியாகின. இதுதவிர இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்கள் நேரடியாக வெளியான ஓடிடி படங்கள் என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

#image_title
இந்தநிலையில் இவ்வளவு படங்கள் திரையரங்கில் வெளியானாலும் இதில் திரைப்பட தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த படம் எது என்பது தான் ரசிகர்களின் கேள்வி. அந்தவகையில் எதிர்பாராமல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பினை பெற்ற லப்பர் பந்து திரைப்படம் பன்மடங்கு லாபம் ஈட்டியிருப்பதாக தெரிகிறது.
சுமார் 5 கோடி பட்ஜெட்டில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான இப்படம் திரையரங்கில் மட்டும் 40 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. இதுதவிர ஓடிடி, சாட்டிலைட் உரிமைகள் தனி. ஆக இந்த 2024ம் ஆண்டு லப்பர் பந்து ஆண்டாக இருந்துள்ளது. தீபாவளிக்கு வெளியான படங்களில் அமரன் தற்போது 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

amaran
எனவே ஆண்டு முடிவில் அமரன் திரைப்படமும் இந்த லிஸ்டில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் கோட் படமும், ரஜினியின் வேட்டையன் படமும் இந்த வருடம்தான் வெளியானது. ஆனால், அந்த படங்கள் அதிக பட்ஜெட் உருவானதால் பெரிய லாபத்தை ஈட்டவில்லை.
எனவேதான், அவை லிஸ்ட்டில் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Don vs Dragon: டான் vs டிராகன்…! எல்லாமே ஒரே மாதிரி இருக்கே?!… அப்ப படத்தோட கதையும் இதுதானா!…