நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் எந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஹெச் வினோத் இயக்கிய துணிவு திரைப்படத்திற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. துணிவு படத்திற்கு பிறகு லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார்.
இதையும் படிங்க: விக்ரம் வசூலை முறியடித்த அமரன்!.. ஆனாலும் வட போச்சே ஃபீலிங்கில் ஏ.ஆர்.முருகதாஸ்!..
படத்தில் இயக்குனர்களின் மாற்றம் என்று கடைசியாக மகிழ்ச்திருமேனி கையில் இந்த திரைப்படம் ஒப்படைக்கப்பட்டது. விடாமுயற்சி என்று பெயர் வைத்ததுடன் சரி படம் தொடர்பான எந்த அப்டேட்டும் கடந்த ஒன்றரை வருடங்களாக வெளியாகவில்லை. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை மாற்றம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதற்கு இடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று இரவு 11 மணிக்கு விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை ஆச்சிரியப்படுத்தியது. படத்தின் டீசர் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கின்றது என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்படுகின்றது. படத்தின் ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதால் அதனை எடுத்து முடித்துவிட்டு இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக ஒரு பக்கம் தகவல் வெளியாகி இருக்கின்றது.
மற்றொருபுறம் குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறியிருந்தார். இப்போது அஜித்தின் இரண்டு படங்களில் எந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக போகின்றது என்பது கேள்விக்குறியாக மாறி இருக்கின்றது. மேலும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் பாக்கி இருப்பதாகவும், இதனால் இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகாது மே 1-ம் தேதி தான் ரிலீஸ் ஆகும் என்று கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: சத்தமில்லாமல் உதவி செய்த விஜய்!.. இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது தளபதி?..
முதலில் இப்படத்தின் படப்பிடிப்பு 7 நாட்கள் மட்டுமே மீதம் இருப்பதாக கூறி வந்த நிலையில் தற்போது 20 நாட்கள் வரை படப்பிடிப்பு மீதம் இருக்கின்றது என்று கூறப்பட்டு வருகின்றது. வானிலை நிலவரம் போல மாறி மாறி பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் இந்த படம் தான் ரிலீஸ் ஆகும் என்று இரண்டு படத்தின் படக்குழுவினரும் கூறி வருவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆக மொத்தம் பொங்கலுக்கு ஏதாவது ஒரு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.
