9 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கலுக்கு மோதும் அஜீத்-விஜய் படங்கள்.. யாருக்கு வெற்றி?..

Varisu Vs Thunivu
தமிழ்சினிமாவில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் இவர்களுக்கு அடுத்தபடியாக மோதிக்கொள்ளும் இரு பெரும் கதாநாயகர்கள் யார் என்றால் அது அஜீத்-விஜய் தான். இவர்கள் படம் வந்தாலே ரசிகர்கள் தல, தளபதி என திரையங்கு முன் போடும் ஆட்டம் திருவிழா கொண்டாட்டம் தான்.
அதிலும் தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாள்களில் இருவருடைய படங்களும் வந்தால் அதை இரட்டிப்பு கொண்டாட்டமாகக் கருதி அவர்கள் தனது தலைவரது படத்திற்கு உற்சாக வரவேற்பு கொடுப்பர். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணுவது, வாண வேடிக்கை, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என திரையரங்கம் அந்த 3 நாள்கள் திக்குமுக்காடிப் போய்விடும்.
அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறது 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத், விஜய் படங்கள் வரும் பொங்கலுக்கு மோதுகின்றன. அஜீத்துக்கு துணிவு படமும், விஜய்க்கு வாரிசு படமும் வருகிறது.
எது வெற்றி பெறும் என்று கேட்டால் இரண்டு படமும் என்று தான் எல்லோருக்கும் ஆசை இருக்கும். அதற்கேற்ப அவர்களது படங்களுக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இனி இதற்கு முன் பொங்கலுக்கு அஜீத், விஜய் படங்கள் மோதின அல்லவா. அதுபற்றி இப்போது பார்ப்போம்.
பிரண்ட்ஸ் - தீனா

Friends movie
2001ல் பிரண்ட்ஸ், தீனா...என்ற இருபடங்கள் வெளியாயின. தீனா படத்தில் தான் அஜீத்துக்கு தல என்ற பெயர் வந்தது. பார்க்கப்போனால் ரெண்டு படமுமே ஹிட் தான்.
மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா இருவரும் இணைந்து நடித்த படம ப்ரண்ட்ஸ். தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்தாற்போல் படம் ரசனையுடன் இருந்ததால் வெற்றி பெற்றது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜீத்குமார், சுரேஷ்கோபி இருவரும் இணைந்து நடித்த அதிரடி திரைப்படம். அஜீத்துக்கு ஜோடி லைலா. இந்தப் படம் தல ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது.
ஆதி - பரமசிவன்

Paramasivan
2006ல் ஆதி, பரமசிவன் என்ற இரு படங்கள் மோதின. ஆனால் இரண்டுமே பிளாப். விஜய் நடித்த ஆதி படம் ரீமேக். மாஸ் சீன் ஓவர். பரமசிவன் படத்தில் அஜீத் உடம்பைக் குறைச்சும் படம் சரியாக போகல. அதனால் இரு தரப்பு ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
போக்கிரி -ஆழ்வார்
2007ல் போக்கிரி, ஆழ்வார் என இருபடங்கள் பொங்கலுக்கு மோதின. இவற்றில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிரபுதேவா இயக்க விஜய், அசின், பிரகாஷ்ராஜ், நெப்போலியன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
மணிசர்மாவின் இசையில் பாடல்கள் மட்டும் அதிரடி அல்ல. படமும் தான். அதே போல தல அந்த ஆண்டில் பொங்கலுக்கு வெளியான அஜீத்தின் ஆழ்வார் படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. செல்லா இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அஜீத், அசின் நடிப்பில் வெளியான படம் தோல்வியைத் தழுவியது.
ஜில்லா.... வீரம்

Veeram
2014ல் ஜில்லா.... வீரம்...வெளியானது. ரெண்டும் ஹிட். இரா.தி.நேசன் இயக்க, ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் வெளியான படம் ஜில்லா. விஜய், மோகன்லால் இணைந்து நடித்த அதிரடி படம். இதில் விஜய்க்கு ஜோடி காஜல் அகர்வால். டி.இமான் இசையில் பாடல்கள் தெறிக்கவிட்டன.
அதே ஆண்டில் தல அஜீத்துக்கு வெளியான வீரம் படம் மாஸ் ஹிட். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் சக்கை போடு போட்டன. அஜீத், தமன்னா நடித்த இந்தப்படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவைத் தெரிவித்தனர்.
துணிவு - வாரிசு
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 9 ஆண்டுகளுக்குப் பின் அஜீத், விஜய் படங்கள் வரும் பொங்கலுக்கு மோதுகின்றன. அஜீத்துக்கு துணிவும், விஜய்க்கு வாரிசும் வருகிறது. இந்தப்படத்திற்கான முன்பதிவு தற்போது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் இந்தப்படம் தல அஜீத்துக்கு வர இருப்பதால்... பாடல்களும் பட்டையைக் கிளப்பி வருவதால்...இந்தப்படம் தங்களுக்கு நிச்சயம் இரட்டிப்பு சந்தோஷத்தைத் தரும் என்று ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
படத்தில் அஜீத்தின் கெட் அப்பும் வித்தியாசமாக உள்ளது. அவரது ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். பெரிய அளவில் நடந்த வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை நகர்கிறது.
அதே போல தளபதி விஜய்க்கு வாரிசு வருகிறது. வம்சி பைடிபைவி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தணா நடித்த வாரிசு படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைய உள்ளது.
தமன் இசையில் பாடல்கள் தூள் கிளப்புகின்றன. படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு, ஷாம் நடிக்கின்றனர். இந்தப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே...பாடல் செம சூப்பராக உள்ளது.