Connect with us

கமலுக்கு பதில் அவரா?…வனிதாவுக்கு இது செட் ஆகாதே!…ஒரு கலவரம் இருக்கு!…

kamal

Biggboss Tamil 5

கமலுக்கு பதில் அவரா?…வனிதாவுக்கு இது செட் ஆகாதே!…ஒரு கலவரம் இருக்கு!…

இதுவரை தமிழ் பிக்பாஸ் 5 சீசன்களை கமல்ஹாசன் நடத்தினார். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பானது. தற்போது அட்ல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதையும் கமல்ஹாசனே நடத்தி வந்தார். ஆனால், திடீரென இதிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘லாக்டவுன்‌ விதிமுறைகளால்‌ விக்ரம்‌ திரைப்படத்தின்‌ படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதன்‌ விளைவாக, பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ நிகழ்ச்சிக்கு என நான்‌ ஒதுக்கியிருந்த தேதிகளும்‌, விக்ரம்‌ படப்பிடிப்பு தேதிகளிலும்‌ மாற்றங்கள்‌ செய்ய வேண்டியதாகிவிட்டது.

biggboss

இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும்‌ சூழலில்‌ என்னோடு பணியாற்றும்‌ பிற முக்கியமான நடிகர்கள்‌, தொழில்நுட்பக்‌ கலைஞர்களுடைய தேதிகளையும்‌ மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால்‌, பிக்பாஸ்‌ அல்டிமேட்‌ மற்றும்‌ விக்ரம்‌ இரண்டையும்‌ ஒரே நேரத்தில்‌ மேற்கொள்ள முடியாத சூழல்‌ உருவாகிவிட்டது’ என விளக்கமளித்திருந்தார்.

இதையும் படிங்க: இது அரபிக்குத்து இல்ல அந்த குத்து!…யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்….

இந்நிலையில், கமல்ஹாசன் விலகிய நிலையில், அவருக்கு பதில் யார் இந்நிகழ்ச்சியை நடத்தப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்தினார். எனவே, அவரே இந்த நிகழ்ச்சியை நடத்துவாரா இல்லை வேறு ஒருவர் வருவாரா என்பது தெரியவில்லை.

ramya

ஏற்கனவே, ஒரு நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாருக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே முட்டிக்கொண்டு, அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார் வனிதா. மேலும், ரம்யா கிருஷ்ணனை கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது அவர் பிக்பாஸ் வீட்டில் அவர் இருக்கும் நிலையில், ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை நடத்தினால் என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top