Biggboss Tamil 8: இந்த வாரம் 'டபுள்' எவிக்சன்... வெளியேற போவது இவங்களா?..

by சிவா |
biggboss
X

#image_title

Biggboss Tamil: அதில் அருண் பிரசாத், விஷால், சாச்சனா, தீபக், ரஞ்சித், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, முத்துக்குமரன் என மொத்தம் 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். வைல்டு கார்டு என்ட்ரிகளை நாமினேட் செய்யக்கூடாது என்பதால் அவர்கள் யாரும் இந்த லிஸியில் இடம்பெறவில்லை.

கடந்த வாரம் ஆச்சரியமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரையும் எலிமினேட் செய்யவில்லை. தீபாவளி நேரம் என்பதால் பிக்பாஸ் கருணை காட்டியிருந்தார். எனவே இந்த வாரம் நிச்சயம் டபுள் எவிக்சனுக்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

soundarya

#image_title

வாக்கெடுப்பின் அடிப்படையில் சுனிதா, சாச்சனா, ஆர்ஜே ஆனந்தி ஆகிய மூவரும் கடைசி இடங்களில் உள்ளனர். இதில் சுனிதா சண்டை, சச்சரவுகளில் அதிகம் கவனம் செலுத்துபவர். அதோடு விஜய் டிவியின் சொத்தும் கூட. எனவே மற்ற இருவரும் வெளியேறவே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இரண்டும் பெண் போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என பிக்பாஸ் நினைத்தால் சுவாரசியம் இன்றி ஆடிவரும் தீபக் வெளியேற்றப்படலாம். ஏனெனில் கடந்து வந்த பாதை டாஸ்கில் அவர் எந்தவொரு சுவாரசியமும் அளிக்கவில்லை. அதோடு ஆட்டத்திலும் துணிச்சலாக இறங்காமல் ஆழம் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

எது எப்படியோ வீட்டைவிட்டு வெளியேறும் அந்த இருவர் யார் என்பதை நாம் அதிகாரபூர்வமாக அறிந்துகொள்ள நாளை இரவு வரை காத்திருக்கத்தான் வேண்டும். எதிர்பாராததை எதிர்பாருங்கள் அதுதானே பிக்பாஸ்!.

இதையும் படிங்க: Biggboss Tamil: இந்த சீசனோட ‘வெஷ பாட்டில்’ யாருன்னு தெரியுமா?

Next Story